சட்டப் பாதுகாப்பு

அகதிகளும் புகலிடக் கோரிக்கையாளர்களும் மலேசியாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

மலேசியாவில் ஏதேனும் குற்றங்களைச் செய்யும் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மலேசிய சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள்.

அகதிகள் அல்லது புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்ற நபர்களை போலவே காவல்துறை விசாரணை, கைது, குற்றச்சாட்டு மற்றும் சிறை தண்டனைகளை கடந்து வருவார்கள்.

மலேசியாவில் குடியேற்றத்துடன் தொடர்பில்லாத குற்றங்களைச் செய்யும் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு UNHCR சட்ட உதவி வழங்குவதில்லை

குடியேற்ற காரணங்களுக்காக அகதிகள் அல்லது புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்படும்போது அல்லது தடுத்து வைக்கப்படும் போது, ​​UNHCR அவர்களை விடுவிக்க இவ்வழிகள் மூலம் கோருகிறது:

அகதி மலேசியா இணையதள ஆன்லைன் படிவம் அல்லது UNHCR கைது மற்றும் தடுப்பு ஹாட்லைன் மூலம் இத்தகைய கைதுகள் மற்றும் தடுப்புக்காவல் பற்றிய தகவலைப் பெறுதல் மற்றும் சரிபார்த்தல்

கைது செய்யப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களின் நிலையைச் சரிபார்க்க சட்ட அமலாக்க முகமைகளை ஈடுபடுத்துதல்

அகதி அல்லது புகலிடம் கோருபவருக்கு சட்டப்பூர்வ பிரதிநிதித்துவம் மற்றும் உதவியை வழங்குதல்

கைது மற்றும் தடுப்பு ஹாட்லைன் மற்றும் அகதி மலேசியா இணையதளம் மூலம் செய்யப்பட்ட அனைத்து கைது அறிக்கைகளையும் UNHCR கண்காணிக்கிறது. குடிவரவுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை மேலும் தடுத்து வைக்கப்படுவதை அல்லது வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்கு உதவ, UNHCR உடனடியாக சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க நிறுவனத்துடன் தலையிடும். கைது செய்யப்பட்ட நபரின் அடையாளத்தை சரிபார்க்க அதிகாரிகள் UNHCR ஐ குறிப்பாகக் கேட்காத வரை, ஆரம்ப 14-நாள் காவலில் வைக்கும் காலத்தில் UNHCR உதவ முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.

சந்தேகத்திற்குரிய குற்றத்தைப் பற்றி மேலும் விசாரிப்பதற்கு அமலாக்க அதிகாரிக்கு இடங்கொடுக்க, தடுப்புக் காலத்தின் போது ​​அந்நபர் தடுத்து வைக்கப்படுவார். விசாரணையின் முடிவைப் பொறுத்து, ஒரு நபர் விடுவிக்கப்படலாம் அல்லது நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லப்படலாம்.

கைது மற்றும் தடுத்துவைக்கப்பட்டிருப்பதை புகாரளிப்பது.

எங்கு புகாரளிப்பது?

1. கைது மற்றும் தடுப்புக்காவல் ஹாட்லைன்

UNHCR இன் கைது மற்றும் தடுப்பு ஹாட்லைனை அழைக்கவும் (ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகள் மட்டும்).

+6012 630 5060
திங்கள் முதல் வெள்ளி வரை: காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
சனி மற்றும் ஞாயிறு: காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை

2. அகதி மலேசியா இணையதளம் (Refugee Malaysia website)

அகதி மலேசியா (Refugee Malaysia) இணையதளத்தில் உள்ள தொடர்பு பக்கத்திற்குச் சென்று, ‘கைது மற்றும் தடுப்புக்காவல் புகார்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

https://refugeemalaysia.org

 

எப்போது புகாரளிக்க வேண்டும்?

 • புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் கைது அல்லது தடுப்புக் காவலில் இருக்கும்போது
 • புகார் அளிப்பதை கூடிய விரைவில் செய்யுங்கள்

1. புகார் அளிக்கும் பொழுது பொருந்திய விவரங்களை வழங்கவும்

கைது செய்யப்பட்ட நபரின் விவரங்கள்:
பெயர், வயது, பாலினம், UNHCR கோப்பு எண், பிறந்த நாடு, நாட்டுரிமை, இனம், மதம், ஏதேனும் மருத்துவ நிலை மற்றும் பிற பாதிப்புகள்.

கைது செய்யபட்ட விவரங்கள்:
கைது செய்யப்பட்ட தேதி, கைது செய்யப்பட்டதற்கான காரணம், கைது செய்யப்பட்ட இடம்/தடுப்புக்காவல், ஏதேனும் நீதிமன்ற விவரங்கள்.

2. புதுப்பிக்கப்பட்ட விவரங்களை வழங்கவும்

புதுப்பிக்கப்பட்ட விவரங்களை கிடைக்கும் போது வழங்கவும்

நீங்கள் தடுத்து நிறுத்தப்பட்டால் அல்லது கைது செய்யப்பட்டால்

அமைதியாக இருங்கள்

அதிகாரிகளிடம் பணிவுடன் ஒத்துழைக்கவும்

உங்கள் கைதுக்கான காரணத்தைக் கேளுங்கள்

கைது செய்யும் அதிகாரியிடம் உங்களின் அசல் UNHCR ஆவணத்தைக் காட்டவும்

UNHCR Verify Plus பயன்பாட்டைப் பயன்படுத்தி SQR குறியீட்டைக் கொண்டு உங்கள் அசல் UNHCR ஆவணத்தை ஒரு அதிகாரி சரிபார்க்க முடியும்

UNHCR, குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்கு முடிந்தவரை விரைவில் தெரிவிக்கவும்

உங்கள் UNHCR ஆவணம் அல்லது குறிப்பு எண், கைது செய்யப்பட்ட இடம், சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மற்றும் கைது செய்த அதிகாரியின் தொடர்பு எண், பேட்ஜ் அடையாள எண் (கிடைத்தால்), நீதி மன்றத்திற்கான தேதி போன்றவற்றை அவர்களுக்கு வழங்கவும்.

நீங்கள் நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டால்

v

நீதிமன்றத்திற்கு தெரிவிக்கவும்

உங்களிடம் UN ஆவணம் இருந்தால் அல்லது பதிவு விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தால், தயவுசெய்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கவும்

UNHCR க்கு தெரிவிக்கவும்

நீங்கள் நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லப்படுகிறீர்கள் என்பதை UNHCRக்கு உடனடியாகத் தெரிவித்து, UNHCR அல்லது உங்கள் குடும்பத்தினர்/நண்பர்களைத் தொடர்பு கொள்ள நீதிபதியிடம் அனுமதி கோருங்கள்.

மொழிப்பெயர்ப்பாளருக்குக் கேளுங்கள்

பஹாசா மலேசியா (மலாய்) அல்லது என்ன சொல்லப்படுகிறது என்பது உங்களுக்கு புரியவில்லை என்றால் “UNHCR” என்று திரும்பத் திரும்பச் சொல்லி ஒரு மொழிப்பெயர்ப்பாளருக்குக் கேளுங்கள். உங்கள் தலையை அசைக்க வேண்டாம், ஏனென்றால் உங்களுக்கு சொல்லப்படுவதை நீங்கள்புரிந்துக்கொள்வது போல் தோன்றலாம்

உங்களை அடையாளப்படுத்திக்கொள்ளுங்கள்

நீங்கள் UNHCR இல் ஒரு அகதி அல்லது புகலிடம் கோருபவர் என்று நீதிபதியிடம் கூறவும்

ஒரு வழக்கறிஞருக்குக் கேளுங்கள்

உங்களுக்குச் சட்ட உதவி தேவை என்பதை நீதிபதியிடம் தெரிவிக்கவும்

நினைவூட்டல்கள்

 • நீங்கள் எங்கு சென்றாலும் உங்களின் அசல் UNHCR ஆவணத்தை எடுத்துச் செல்லவும்
 • உங்கள் UNHCR ஆவண எண்ணை நினைவில் கொள்ளுங்கள்
 • குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் உங்கள் UNHCR எண்ணை நினைவில் வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ளவும்
 • உங்கள் குடும்பம் அல்லது சமூகத் தலைவர்களின் ஒன்று அல்லது இரண்டு தொடர்பு எண்களை நினைவில் கொள்ளுங்கள்
 • உங்கள் குடும்பம் அல்லது நண்பர்கள் உங்கள் இருப்பிடத்தை அறிந்திருப்பதை உறுதிசெய்யவும்

ஒரு குற்றத்தைப் புகாரளித்தல்

இரண்டு வகையான போலீஸ் புகார்கள் உள்ளன:

 1. காவல்துறைக்கு மட்டுமே தெரிவிக்க விரும்புகிறீர்கள் ஆனால் குற்றம் செய்த நபர் மீது காவல்துறை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றால், நீங்கள் “வழக்கு அறிக்கை” செய்ய வேண்டும்.
 2. குற்றத்தைச் செய்த நபரை விசாரித்து, கைது செய்து, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவது போன்ற கூடுதல் நடவடிக்கையை காவல்துறை எடுக்க வேண்டுமெனில், நீங்கள் “நடவடிக்கை அறிக்கை” செய்ய வேண்டும்.

காவல் துறையில் புகார் செய்வது

ஒரு காவல் நிலையத்திற்குச் செல்லுங்கள்
 • அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் செல்லுங்கள். அனைத்து காவல் நிலையங்களும் 24 மணி நேரமும் திறந்திருக்கும்
 • ஆங்கிலம் அல்லது மலாய் மொழி பேசத் தெரியாதவர்கள், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுடன் செல்லலாம்
 • உங்கள் அடையாள ஆவணம் (UNHCR அட்டை போன்றவை) மற்றும் சம்பவம் தொடர்பான பிற ஆவணங்களைக் கொண்டுச் செல்லுங்கள்
காவல் நிலையத்தில்
 • உங்களை அறிமுகப்படுத்தி, உங்கள் அடையாள ஆவணத்தை காவல்துறையிடம் காட்டுங்கள்
 • நீங்கள் செய்ய விரும்பும் போலீஸ் புகார் வகையை (வழக்கு அறிக்கை அல்லது நடவடிக்கை அறிக்கை) காவல்துறைக்கு தெரிவிக்கவும்.
 • சம்பவம் எங்கு நடந்தது, எப்போது நடந்தது, சம்பந்தப்பட்டவர்கள் யார், என்ன நடந்தது என்பதை காவல்துறைக்கு விளக்கவும்
அடுத்தது என்ன?
 • காவல்துறை அறிக்கையின் நகல் உங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்
 • நீங்களும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு காவல் துறை அதிகாரியால் மேலதிக நேர்காணலுக்கு அழைக்கப்படலாம்
 • குற்றவாளிக்கு எதிராக குற்றம் சுமத்த அதிகாரம் முடிவு செய்தால் நீங்கள் நீதிமன்றத்தில் சாட்சியாக ஆஜராக வேண்டியிருக்கலாம்
மேலும் குறிப்புகள்!
 • காவல் நிலையத்திற்குச் செல்வதற்கு முன் வரைவு காவல் அறிக்கையைத் தயாரித்தால் செயல்முறைகள் வேகமாக இருக்கும்
 • வரைவு அறிக்கை ஆங்கிலம் அல்லது மலாய் மொழியில் இருக்க வேண்டும்
 • அந்த அறிக்கையை உங்கள் தொலைபேசியின் குறுஞ்செய்தி அல்லது குறிப்பில் அல்லது வெற்று பெண்டிரைவில் சேமிக்கவும் அல்லது ஒரு காகிதத்தில் எழுதி வைக்கவும். காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்

பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பணியிட/வேலை சம்பந்தப்பட்ட விவாதங்களுக்கு சட்ட உதவி வழங்கும் NGOக்கள் உள்ளன. பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் வாழ்வாதாரங்கள் பக்கங்களைப் பார்க்கவும்.

சில கேள்விகள் உள்ளதா?

மேலும் தகவலுக்கு, சட்டப் பாதுகாப்பு – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை (FAQ) பார்க்கவும்.