UNHCR சேவைகளுக்காக இரவு நேரத்தில் UNHCR அலுவலகத்திற்கு வருமாறு தனிநபர்கள் WhatsApp செய்திகளைப் பெறுவதாக UNHCR அறிக்கைகளைப் பெற்றுள்ளது.
இது ஒரு மோசடி. UNHCR அலுவலக நேரத்திற்குள் மட்டுமே (திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை) சந்திப்புகளை வழங்குகிறது. அலுவலக நேரத்திற்கு அப்பாற்பட்ட சந்திப்புக்காக UNHCRக்கு உங்களை வரச் சொல்லும் நபர்களிடமிருந்து ஜாக்கிரதை. இந்த நபர்கள் UNHCR உடன் சம்பந்தப்பட்டவர்கள் இல்லை மற்றும் UNHCR சந்திப்புகளை வழங்குவதற்கான அதிகாரம் அல்லது திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை.
UNHCR சேவைகள் அனைத்தும் இலவசம் என்பதையும் நினைவில் கொள்ளவும். UNHCR உங்களிடம் பணம் கேட்காது. பணத்திற்கு ஈடாக UNHCR ஆவணங்களைப் பெறவும், UNHCR செயல்முறைகளை அணுகவும் அல்லது உங்கள் வழக்கை விரைவாகச் செயல்படுத்தவும் உங்களுக்கு உதவ முடியும் எனக் கூறும் நபர்களிடம் கவனமாக இருங்கள். உங்கள் தனிப்பட்ட தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
பணத்திற்கு ஈடாக UNHCR சேவைகளை (UNHCR ஆவணங்கள், பதிவு, RSD, மீள்குடியேற்றம் போன்றவை) வழங்க முடியும் எனக் கூறும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் அல்லது நபர்களை நீங்கள் கண்டால், இதைப் புகாரளிக்கவும்:
- போலீஸ் CCID ஸ்கேம் ரெஸ்பான்ஸ் மையம் 03-26101559 அல்லது 03-26101599
- UNHCRக்கு, இந்தப் படிவத்தைப் பயன்படுத்தி
உங்கள் UNHCR அட்டை ரத்து செய்யப்படாது, மேலும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளை UNHCR க்கு புகாரளித்தால் உங்கள் வழக்கு தாமதம் ஆகாது அல்லது மூடப்படாது.
UNHCR இன் செயல்முறைகள் மற்றும் உதவி பற்றிய கூடுதல் தகவலுக்கு, Refugee Malaysia இணையதளத்தைப் பார்க்கவும்.