மோசடிகளில் ஜாக்கிரதை

UNHCR எந்தவொரு மோசடி, ஊழல் அல்லது சுரண்டலையும் பொறுத்துக்கொள்ளாது.

UNHCR மற்றும் அதன் கூட்டாளர்களால் வழங்கப்படும் அனைத்து விண்ணப்பப் படிவங்களும் சேவைகளும் இலவசம். பதிவு அல்லது மீள்குடியேற்றம் அல்லது உங்கள் வழக்கை விரைவாகச் செயல்படுத்த நீங்கள் பணம் செலுத்த முடியாது. UNHCR அல்லது அதன் கூட்டாளர் சேவைகளுக்கு பணம் செலுத்துமாறு கேட்கும் எவரையும் அல்லது எந்தவொரு நிறுவனத்தையும் நம்ப வேண்டாம்.

பணம் அல்லது பிற சலுகைகளுக்கு ஈடாக உங்களுக்கு பதிவு, மீள்குடியேற்றம், நிதி அல்லது பிற வகையான உதவிகள், மோசடியான UNHCR ஆவணங்கள் மற்றும் போலி உரிமைகோரல்களை வழங்கக்கூடிய மோசடி செய்பவர்களிடமிருந்து ஜாக்கிரதை. இந்தச் சலுகைகள் உங்களுக்கு நேரிலோ அல்லது Facebook, Telegram, WhatsApp, Viber, Instagram, YouTube அல்லது பிற சமூக ஊடகங்கள் மூலமாகவோ வழங்கப்படலாம். அவர்கள் UNHCR உடன் இணைக்கப்பட்டவர்கள் என்று உங்களை நம்ப வைக்க அவர்கள் உங்களுக்கு தகவலைக் காட்டலாம். அவர்களை நம்பாதீர்கள்.

இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை அளிப்பவர்கள் உங்கள் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களை முற்றிலும் தவிர்க்கவும். அவர்கள் உங்கள் பணத்தை திருடலாம் அல்லது உங்கள் தனிப்பட்ட தகவல்களை விற்பதன் மூலம் லாபம் பெறலாம்.

பணத்திற்கு ஈடாக உங்களுக்கு வழங்கப்படும் எந்த UNHCR சேவைகளும் மோசடியானவை. உங்களிடமிருந்து பணம் அல்லது பாலியல் உட்பட வேறு ஏதேனும் சலுகைகள் கோரப்பட்டால், அதை UNHCR க்கு இங்கே உள்ள ஆன்லைன் படிவத்தின் மூலம், UNHCR கூட்டாளர்களிடம் மற்றும் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு உடனடியாகப் புகாரளிக்க வேண்டும்.

மலேசிய சட்டப்படி மோசடி ஒரு குற்றமாகும். அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகி மோசடி குறித்து புகார் அளிக்கலாம். மோசடி சம்பவத்தைப் புகாரளிக்கும் போது உங்களிடம் இருக்கும் அனைத்து ஆதாரங்களையும் எடுத்துச் செல்லுங்கள்.

மோசடி சம்பவங்களைப் புகாரளிப்பது உங்கள் UNHCR வழக்கை தாமதப்படுத்தாது மற்றும் எதிர்மறையாக பாதிக்காது.

மோசடி மற்றும் ஊழல்

மோசடி என்பது UNHCR, அதன் கூட்டாளர்கள் மற்றும்/அல்லது அகதிகளை வேண்டுமென்றே தவறாக வழிநடத்தி ஒரு நன்மையைப் பெறுவதற்காக தவறாக சித்தரித்தல் அல்லது மறைத்தல் உட்பட எந்த ஒரு செயல் அல்லது புறக்கணிப்பு ஆகும்.

ஊழல் என்பது மற்றொரு தரப்பினரின் நடவடிக்கைகளில் முறையற்ற ஆற்றல் அளிப்பது உட்பட மதிப்புள்ள எதையும் வழங்குவது, கொடுப்பது, பெறுவது அல்லது கோருவது (நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ) ஆகும்.

மோசடி என்பது பொதுவாக தனிப்பட்ட அல்லது நிதி ஆதாயத்திற்காக நேர்மையற்ற நடத்தையை உள்ளடக்கியது. ஊழல் என்பது லஞ்சம் அல்லது வேறு ஏதேனும் தேவையற்ற சலுகைகளை வழங்குவது அல்லது பெறுவது.

மோசடி மற்றும் ஊழல் பற்றிய கூடுதல் தகவலுக்கு, மோசடி மற்றும் ஊழல் பக்கத்தை தயவுசெய்து பார்வையிடவும்

அகதிகளுக்கு எதிரான மோசடி மற்றும் ஊழலின் எடுத்துக்காட்டுகள்

அடையாள மோசடி என்பது UNHCR இல் பதிவு செய்ய ஒரு நபர் வேறொருவரின் தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்துவது, அல்லது ஒரு நபர் தனது பெயர் அல்லது அடையாளம் காணும் பிற தகவலைப் பற்றி பொய் சொல்வது. மற்றொரு நபரின் UNHCR பதிவுக் கடிதத்தைப் பயன்படுத்தி அந்த நபருக்கான சேவைகள் அல்லது செயல்முறைகளை அணுகுவதும் இதில் அடங்கும்.

குடும்ப அமைப்பு மோசடி என்பது தவறான பலன்களைப் பெறுவதற்காக ஒரு குடும்பத்தின் உண்மையான அமைப்பு அல்லது குடும்பத்தில் உள்ள உறவுகளைப் பற்றி பொய் சொல்வதை உள்ளடக்குகிறது. தவறான குடும்ப உறவு உரிமைகோரல்களின் அடிப்படையில் ஒரு வழக்கில் இருந்து தனிநபர்களைச் சேர்ப்பது அல்லது அகற்றுவது இதில் அடங்கும். உதாரணமாக, ஒரு வழக்கில் யாரையாவது சேர்ப்பதற்காக நண்பர்களை தங்கள் சகோதரர்கள் என்று பொய்யாகக் கூறலாம் அல்லது சகோதர சகோதரிகளின் பிள்ளையை தங்கள் சொந்தப் பிள்ளையாக சேர்க்கலாம்.

ஆவண மோசடி என்பது தவறான அல்லது கையாளப்பட்ட ஆவணங்களை உண்மையானதாக வழங்குவதை உள்ளடக்குகிறது. ஒரு முழு ஆவணத்தை உருவாக்குதல், முறையான ஆவணங்களை மாற்றுதல் அல்லது அடையாள அட்டைகள், UC கடிதங்கள், சந்திப்பு முன்பதிவு சீட்டுகள் அல்லது மருத்துவ ஆவணங்கள் போன்ற பொய்யாக்கப்பட்ட UNHCR ஆவணங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.

சுரண்டல் திட்டமானது, மீள்குடியேற்ற நாடுகள் உட்பட UNHCR அல்லது அதன் கூட்டாளர்களுடன் சிறப்பு உறவுகள் அல்லது இணைப்புகளை வைத்திருப்பதாக பொய்யாகக் கூறும் நபர் அல்லது குழுக்கள் மற்றும் பதிவு, ஆவணங்கள், மீள்குடியேற்றம் அல்லது வேறு ஏதேனும் UNHCR செயல்முறைக்கு ஈடாக பணம் கேட்பது. UNHCR அல்லது அதன் கூட்டாளர்களின் ஊழியர்களாக பாசாங்கு காட்டுபவர்கள் அல்லது ஆன்லைன் / சமூக ஊடகங்கள் மூலம் சுரண்டல் திட்டங்கள் நடக்கலாம் (எ.கா. UNHCR ஆவணங்களை ஒரு கட்டணத்திற்கு வழங்குவதாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனிநபர்களை பதிவு செய்வதை ஒருவர் முகநூல் மூலம் உறுதியளிப்பது, அல்லது WhatsApp செய்திகள் மூலம் UNHCR/கூட்டாளர் ஊழியர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து புகைப்படங்கள் அல்லது ஆடியோ கிளிப்புகளை அனுப்பி, UNHCR செயல்முறைகளுக்கு தனிநபர்கள் பணம் செலுத்துமாறு கேட்டுக்கொள்வது.

ஊழல் என்பது சாதகமான முடிவுகள் அல்லது விரைவான செயல்முறைகளுக்கு ஈடாக UNHCR ஊழியர்களுக்கு பணம் அல்லது சேவைகளை வழங்குவதை உள்ளடக்கியது.

மோசடி எதிர்ப்பு வீடியோக்கள்

மோசடி செய்பவர்கள் கைபேசி பயன்பாடுகள் மூலம் குரல் குறிப்புகளை அனுப்புவது

UNHCR உடன் இணைப்புகள் இருப்பதாக கூறி பதிவு மற்றும் மீள்குடியேற்ற செயல்முறைகளில் ஒரு கட்டணத்திற்கு உதவ முடியும் என்று கைத்தொலைபேசி பயன்பாடுகள் மூலம் உங்களுக்கு குரல் குறிப்புகளை அனுப்புபவர்களிடமிருந்து ஜாக்கிரதை.

மோசடி செய்பவர்கள் கைத்தொலைபேசி பயன்பாடுகள் மூலம் உரையாடுவது

UNHCR உடன் இணைப்புகள் இருப்பதாகக் கூறி கைத்தொலைபேசி பயன்பாடுகள் மூலம் உங்களுடன் உரையாடி, ஒரு கட்டணத்திற்கு பதிவு மற்றும் மீள்குடியேற்ற செயல்முறைகளில் உதவ தனிநபர்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைத் தேடுபவர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருங்கள்.

மோசடி செய்பவர்கள் மோசடியான UNHCR இணையதளங்கள் / பயன்பாடுகளை அமைக்கின்றனர்

மோசடியான UNHCR இணையதளங்கள்/பயன்பாடுகள் மூலம், ஒரு கட்டணத்திற்கு பதிவு மற்றும் மீள்குடியேற்ற செயல்முறைகளில் உதவ தனிநபர்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைத் தேடுபவர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருங்கள்.

UNHCR உடன் சிறப்புத் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறும் சமூகத் தலைவர்கள்

UNHCR உடன் சிறப்புத் தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் மற்றும் ஒரு கட்டணத்திற்கு பதிவு மற்றும் மீள்குடியேற்ற செயல்முறைகளில் உதவ முடியும் என கூறும் சமூகத் தலைவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.

UNHCR ஊழியர்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடி செய்பவர்கள்

UNHCR ஊழியர்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்து, பதிவு மற்றும் மீள்குடியேற்ற செயல்முறைகளை ஒரு கட்டணத்திற்கு வழங்குவதாக கூறும் நபர்களிடமிருந்து ஜாக்கிரதை.

தொடர்புடைய அறிவிப்புகள்

மோசடிகளில் ஜாக்கிரதை: அலுவலக நேரத்திற்க்கு அப்பாற்பட்ட சந்திப்புகள்

UNHCR சேவைகளுக்காக இரவு நேரத்தில் UNHCR அலுவலகத்திற்கு வருமாறு தனிநபர்கள் WhatsApp செய்திகளைப் பெறுவதாக UNHCR அறிக்கைகளைப் பெற்றுள்ளது. இது ஒரு மோசடி. UNHCR அலுவலக நேரத்திற்குள் மட்டுமே (திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை) சந்திப்புகளை...

மோசடிகளில் ஜாக்கிரதை: Haris இன் போலி அகதி மலேசியா பயன்பாடு

ஹரிஸ் பாய், திரு ஹரிஸ், ஹரிஸ் கான் மற்றும் திரு பார்மி என்று அழைக்கப்படும் ரோஹிங்கியா நபர் UNHCR சின்னத்தை பயன்படுத்தி புதிய போலி அகதி மலேசியா பயன்பாட்டை அமைத்துள்ளதாக UNHCR அறிக்கைகளைப் பெற்றுள்ளது. UNHCR செயல்முறைகளுக்கான அணுகலை வழங்க முடியும் எனக் கூறி YouTube இல்...

மோசடிகளில் ஜாக்கிரதை: Mr Haris / Haris Khan / Mr Barmi

UNHCR செயல்முறைகளுக்கான அணுகலை வழங்க முடியும் எனக் கூறும் ஒரு ரோஹிங்கியா நபர், UNHCR சின்னம் பயன்படுத்தி புதிய WhatsApp குழு மற்றும் சேனலை அமைத்துள்ளதாக UNHCR க்கு அறிக்கைகள் கிடைத்துள்ளன. UNHCR செயல்முறைகளுக்கு அணுகலை வழங்க முடியும் என YouTube இல் வீடியோக்களை...

UNHCR ஊழியர் போல் பாசாங்கு செய்யும் பெண்

UNHCR இல் பதிவு மற்றும் மீள்குடியேற்றப் பிரிவில் பணிபுரிவதாகக் கூறும் ஒரு பெண் பற்றிய சமீபத்திய அறிக்கைகளை UNHCR தொடர்ந்து பெற்று வருகிறது. அந்தப் பெண், அகதிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் குரல் செய்திகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி, UNHCR ஆவணங்கள், சந்திப்புகள் மற்றும்...

தேவதாஸ் அல்லது தவதாஸ் அஞ்சன் என்ற நபர்

தேவதாஸ் அல்லது தவதாஸ் அஞ்சன் என்ற மலேசியர் ஒருவர் அகதிகள் சமூகத்தின் உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு, ஒரு மாதத்திற்குள் அவர்களை அமெரிக்காவில் குடியமர்த்த முடியும் என்று கூறிவருவதாக UNHCR செய்திகளைப் பெற்றுள்ளது. விண்ணப்பப் படிவத்திற்கு RM320 செலுத்துமாறும், பின்னர்...

மோசடிகளில் ஜாக்கிரதை: ரோஹிங்கியா யூடியூபர்

UNHCR செயல்முறைகளுக்கான அணுகலை வழங்க முடியும் எனக் கூறும் ஒரு ரோஹிங்கியா நபரை யூடியூப்பில் UNHCR அடையாளம் கண்டுள்ளது. இந்த நபர் UNHCR உடுப்பை அணிந்திருக்கும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார், அவர் UNHCR ஊழியர் மற்றும்/அல்லது UNHCR உடன் இணைக்கப்பட்டவர் என்ற தோற்றத்தை...

சில கேள்விகள் உள்ளதா?

மேலும் தகவலுக்கு, மோசடிகளில் ஜாக்கிரதை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை (FAQ) பார்க்கவும்.