மோசடிகளில் ஜாக்கிரதை (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்) (FAQ)

நான் ஏமாற்றப்பட்டால் எனக்கு எப்படி தெரியும்?

K
C

மீள்குடியேற்றம், பதிவு, நிதி உதவி, UNHCR ஆவணங்கள் அல்லது அகதிகள் கோரிக்கைகள் உள்ளிட்ட சேவைகளுக்கு ஈடாக பாலியல் ஈடுபாடு உட்பட பணம் அல்லது பிற சலுகைகளை மோசடி செய்பவர்கள் கேட்கின்றனர். இந்தச் சலுகைகள் உங்களுக்கு நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ அல்லது Facebook, YouTube அல்லது WhatsApp உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவோ வழங்கப்படலாம். UNHCR செயல்முறைக்கு ஏதேனும் பணம் அல்லது வேறு ஏதேனும் சலுகைகள் கேட்கப்பட்டால், இது மோசடியாகும்.

சில நேரங்களில் மோசடி செய்பவர்கள் உங்கள் நம்பிக்கையைப் பெறுவதற்காக UNHCR-ஐப் பிரதிநிதித்துவப்படுத்துவது போல் நடிக்கின்றனர். உங்களை நம்ப வைக்க, அவர்கள் UNHCR உடன் இணைந்திருப்பதாக உங்களுக்கு தகவலைக் காட்டலாம்.

இதுபோன்ற பொய்களைச் சொல்லும் நபர்கள் உங்கள் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள முற்படுகிறார்கள். அவற்றைத் தவிர்க்கவும், அவர்களை நம்பாதீர்கள். அந்த நபர்கள் உங்கள் பணத்திற்கு மட்டுமே இடை போடுகிறார்கள். எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் ஏமாந்து விடாதீர்கள்.

UNHCR மற்றும் அதன் கூட்டாளர்களால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் உதவிகளும் இலவசம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

ஏமாற்றப்படுவதை நான் எவ்வாறு தவிர்ப்பது?

K
C

உங்கள் கடவுச்சீட்டு, சான்றிதழ்கள் அல்லது UNHCR இலிருந்து நீங்கள் பெறும் ஆவணங்கள் உட்பட உங்களின் தனிப்பட்ட தரவு மற்றும் ஆவணங்களைப் UNHCR மற்றும் அதன் கூட்டாளர்களைத் தவிர வேரு யாரிடமும் பகிர வேண்டாம்.

UNHCR மற்றும் அதன் கூட்டாளர்களிடமிருந்து அனைத்து சேவைகளும் உதவிகளும் இலவசம். UNHCR சேவைக்கு பணம் செலுத்துமாறு கேட்கும் யாரையும் அல்லது எந்த நிறுவனத்தையும் நம்ப வேண்டாம்.

UNHCR சேவைகளுக்கு ஈடாக, பாலியல் ஈடுபாடு உட்பட பணம் அல்லது பிற சலுகைகளை கேட்பவர்களை நம்ப வேண்டாம், மற்றும் இதை உடனடியாக UNHCRக்கு தெரிவிக்கவும்.

நான் மோசடி செய்தால் என்ன ஆகும்?

K
C

UNHCRக்கு தவறான தகவல்களை வழங்குவது மோசடியாகும். UNHCRக்கு நீங்கள் எப்போதும் முழுமையான மற்றும் உண்மையுள்ள தகவலை வழங்க வேண்டும்.

UNHCR ஐ தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் உண்மைகளை திரித்தல் அல்லது மறைத்தல் உள்ளிட்டு உண்மைத் தகவலை வழங்கத் தவறினால், பின்வரும் விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும்:

  • பண உதவி அல்லது மீள்குடியேற்றம் உட்பட பாதுகாப்பு, உதவி அல்லது நீண்ட கால தீர்வுகளுக்கு நீங்கள் தகுதி பெறாமல் போகலாம்;
  • மோசடி குற்றச்சாட்டுகள் உங்கள் கோப்பில் பதிவு செய்யப்படும்;
  • மோசடி செயல்பாடு விசாரிக்கப்படும்போது உங்கள் வழக்கு கணிசமாக தாமதமாகலாம், மேலும் அது இந்த நேரத்தில் நிறுத்தி வைக்கப்படும்;
  • உங்கள் கோப்பில் உள்ள மோசடி பதிவுகள் மீள்குடியேற்ற நாடுகளுடன் பகிரப்படும்; நீங்கள் குற்றம் செய்ததாக சந்தேகம் இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகார நிறுவனங்களுடன் புகார் செய்யப்படலாம்.

மோசடியை நான் எவ்வாறு புகாரளிப்பது?

K
C

அகதிகள் அல்லது பிறர் மோசடி செய்வது பற்றிய புகார்களை நீங்கள் இங்கே அல்லது mlslufrd@unhcr.org என்ற மின்னஞ்சல் மூலம் அகதி மலேசியா ஆன்லைன் மோசடி மற்றும் ஊழல் புகார் படிவத்தில் சமர்ப்பிக்கலாம்.

UNHCR ஊழியர்கள் அல்லது UNHCR கூட்டாளர்களின் ஊழியர்கள் அல்லது ஒப்பந்ததாரர்களின் தவறான நடத்தையைப் புகாரளிக்க விரும்பினால், தயவு செய்து உடனடியாக UNHCR இன் Inspector-General அலுவலகத்திற்கு (IGO) அதன் தலைமையகத்தில் புகாரளிக்கவும்

மின்னஞ்சல்: inspector@unhcr.org
ஆன்லைன்: IGO ஆன்லைன் புகார் படிவம்
அஞ்சல்: UNHCR, 94 Rue de Montbrillant, 1202 Geneva, Switzerland

IGO க்கு புகாரளிக்கப்பட்ட ஒவ்வொரு வழக்கிலும் என்ன நடக்கும் என்பது பற்றிய கூடுதல் தகவலை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

மோசடியைப் புகாரளிக்கும் போது, அதிக பட்ச அளவில் தகவல்களை வழங்குவது முக்கியம். யார் மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறார், எப்போது, எங்கே குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் நடந்தது, சாத்தியமான மோசடி எவ்வாறு அடையாளம் காணப்பட்டது மற்றும் அது எந்த வகையான மோசடியாக இருக்கலாம் என்பது பற்றிய விவரங்கள் இதில் அடங்கும். ஏதேனும் ஆதாரங்கள், சாட்சிகள் தொடர்பான தகவல்கள் அல்லது சம்பவம் தொடர்பான பிற விவரங்களும் சேர்க்கப்பட வேண்டும்.

UNHCR அனைத்து புகார்களையும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது மற்றும் ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பின்தொடர்கிறது. UNHCR உடனான அனைத்து தகவல்தொடர்புகளும் ரகசியமாக வைக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளவும். புகார் செய்வது UNHCR உடனான உங்கள் வழக்கை எந்த வகையிலும் பாதிக்காது. உங்கள் புகாரில், உங்களுக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் ஆதாரங்களையும் வழங்கவும். உங்கள் தொடர்பு விவரங்களை வழங்கினால் நாங்கள் உங்கள் புகாரை உங்களுடன் பிற்பாடு பின்தொடருவோம்.

அநாமதேயமாகவும் புகார்கள் செய்யப்படலாம்.