நிலையான இயக்க நடைமுறைகள்(SOP கள்)

புதுப்பிக்கப்பட்டது: 25 நவம்பர் 2021

மலேசிய அரசாங்கம் ஜூன் 2021 இல் தேசிய மீட்புத் திட்டம் நான்கு கட்டங்களாக நடக்கும் என்று அறிவித்தது. தேசிய மீட்புத் திட்டம் மூன்று குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது:

  • தினசரி கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை
  • தீவிர சிகிச்சை பிரிவு (ICU) வார்டுகளில் ஆக்கிரமிக்கப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கை
  • தடுப்பூசி போடப்பட்ட மக்கள் தொகை சதவீதம்

கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பைக் குறைக்க மலேசிய அரசாங்கத்தின் SOP களுக்கு இணங்கவும்.

கட்டம் 1

மார்ச் 2020 இன் முதல் MCO போலவே, அத்தியாவசியப் பொருளாதாரம் மற்றும் சேவைத் துறைகளைத் தவிர கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளின் இயக்கம் மொத்தமாக நிறுத்தப்படுவதற்கான கடுமையான கட்டுப்பாடு.

மெய்நிகர் கற்றல்

மெய்நிகர் கற்றல் மட்டுமே

சமூக நடவடிக்கைகள்

சமூக நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை

வாகனப் பயணிகள்

ஒரு வாகனத்தில் 2 பயணிகளுக்கு மேல் அனுமதிக்கப்படாது

அத்தியாவசிய சேவைகள்

அத்தியாவசிய சேவைகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்

மாநிலங்களுக்கு இடையேயான பயணம்

மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய அனுமதி இல்லை

கட்டம் 2

தினசரி கோவிட்-19 கேஸ்கள் 4,000துக்கும் குறைவாக இருந்தால், சுகாதார அமைப்பு இனி அபாய கட்டத்தில் இல்லை மற்றும் 10% மக்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றால், 2 ஆம் கட்டத்திற்கு மாற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும்.

பள்ளிக்குத் திரும்புதல்

தேர்வு வகுப்புகள் மட்டுமே பள்ளிக்கு திரும்ப முடியும்

சமூக நடவடிக்கைகள்

சமூக நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை

வாகனப் பயணிகள்

ஒரு வாகனத்தில் 2 பயணிகளுக்கு மேல் அனுமதிக்கப்படாது

தொடுநிலை இல்லாத வெளிப்புற விளையாட்டுகள்

தொடுநிலை இல்லாத வெளிப்புற விளையாட்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன

மாநிலங்களுக்கு இடையேயான பயணம்

மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய அனுமதி இல்லை

கட்டம் 3

தினசரி கோவிட்-19 கேஸ்கள் 2,000துக்கும் குறைவாக இருந்தால், சுகாதார அமைப்பு வசதியான மட்டத்தில் இயங்குகிறது மற்றும் 40% மக்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றால், கட்டம் 3 க்கு மாற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும்.

பள்ளிக்குத் திரும்புதல்

தேர்வு வகுப்புகள் மட்டுமே பள்ளிக்கு திரும்ப முடியும்

உணவகங்களில் உணவருந்துதல்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு உணவகங்களில் உணவருந்த அனுமதிக்கப்படுகிறது

தொடுநிலை இல்லாத விளையாட்டுகள்

தொடுநிலை இல்லாத அனைத்து விளையாட்டுகளும் அனுமதிக்கப்படுகின்றன

வாகனப் பயணிகள்

ஒரு வீட்டில் 3 பேர் வெளியே செல்லலாம்

மாநிலங்களுக்கு இடையேயான பயணம்

மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய அனுமதி இல்லை

கட்டம் 4

தினசரி கோவிட்-19 கேஸ்கள் 500க்குக் குறையும் போது, ​​சுகாதார அமைப்பு நிலையானதும் மற்றும் 60% மக்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றிருந்தால், 4 ஆம் கட்டத்திற்குச் செல்வதை அரசாங்கம் பரிசீலிக்கும்.

மத கூட்டம்

மதக் கூட்டங்களுக்கு அனுமதி உண்டு

சமூக நடவடிக்கைகள்

சமூக நடவடிக்கைகள் 50% திறனில் அனுமதிக்கப்படுகின்றன

உணவகங்களில் உணவருந்துதல்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு உணவகங்களில் உணவருந்த அனுமதிக்கப்படுகிறது

மாநிலங்களுக்கு இடையேயான பயணம்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மாநிலங்களுக்கு இடையேயான பயணம் அனுமதிக்கப்படுகிறது

தேசிய மீட்புத் திட்டம் பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே காணலாம்.

முகமூடி

அனைத்து பொது இடங்களிலும்/வெளியிலும் முகமூடி அணிவது கட்டாயம் என்பதை நினைவில் கொள்ளவும். முகமூடிகளை அகற்ற கூடிய இடங்கள்:

  • வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே இருக்கும்போது.
  • ஹோட்டல்கள் அல்லது தங்கும் விடுதிகளில் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே இருக்கும்போது.
  • வேலை செய்யும் இடத்தில் தனியாக இருக்கும்போது.
  • விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு நடவடிக்கைகளை (உட்புறம் அல்லது வெளிப்புறம்), ​​தனியாக செய்யும்பொழுது மட்டுமே.
  • வாகனத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே இருக்கும்போது.
  • உட்புறம் அல்லது வெளியில் சுற்றியுள்ள பகுதிகளில் மற்ற நபர்கள் இல்லாமல் இருக்கும்போது.
  • உணவு அல்லது நீர் அருந்தும்பொழுது.