மோசடிகளில் ஜாக்கிரதை: ஆப்கானிஸ்தான் நாட்டினருக்கு நெதர்லாந்தில் மீள்குடியேற்றம்.

திங்கட்கிழமை / 10 பிப்ரவரி 2025

ஆப்கானிய குடிமக்களை குறிவைத்து நடத்தப்படும் ஒரு மோசடி குறித்த அறிக்கைகளை UNHCR பெற்றுள்ளது. மின்னஞ்சல்கள் மூலம், UNHCR மற்றும் US Forces Afghanistan (USFORA) ஆகியவை 50 விண்ணப்பதாரர்களை சிறப்பு மனிதாபிமான விசா மூலம் நெதர்லாந்தில் மீள்குடியேற்ற உதவுவதாக அந்த நபர் கூறுகிறார்.

இது ஒரு மோசடி. இந்த நபர்கள் UNHCR உடன் இணைக்கப்படவில்லை, மேலும் யாரையும் மீள்குடியேற்றுவதற்கான அதிகாரமோ திறனோ அவர்களுக்கு இல்லை. உங்கள் தனிப்பட்ட தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள் அல்லது அவர்களுக்கு பணம் கொடுக்காதீர்கள்

அமெரிக்க அகதிகள் சேர்க்கை திட்டம் (USRAP) குறித்த சமீபத்திய அறிவிப்புடன், அச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் நபர்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். சந்தேகத்திற்கிடமான செய்திகள் அல்லது தனிநபர்கள் மீள்குடியேற்றத்தை ஒரு கட்டணத்திற்கு அல்லது வேறு ஏதேனும் சேவைகளுக்கு வழங்க முடியும் எனக் கூறினால், இதைப் புகாரளிக்கவும்:

  • அருகிலுள்ள காவல் நிலையத்தின் காவல்துறையினரையோ அல்லது 03-26101559 அல்லது 03-26101599 (காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை) என்ற எண்ணில் CCID மோசடி மறுமொழி மையத்தையோ தொடர்பு கொள்ளவும்.
  • இந்த படிவத்தைப் பயன்படுத்தி UNHCR-க்கு.

UNHCR சேவைகள் அனைத்தும் இலவசம். பணம் அல்லது பிற சேவைகளுக்கு ஈடாக மீள்குடியேற்றம் அல்லது வேறு ஏதேனும் UNHCR செயல்முறைகளைப் பெற உங்களுக்கு உதவ முடியும் என்று கூறும் நபர்களிடம் கவனமாக இருங்கள்.

சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைப் UNHCR க்கு புகாரளித்தால் உங்கள் UNHCR அட்டை ரத்து செய்யப்படாது மற்றும் உங்கள் வழக்கு தாமதம் ஆகாது அல்லது மூடப்படாது.

UNHCR இன் செயல்முறைகள் மற்றும் உதவி பற்றிய கூடுதல் தகவலுக்கு, Refugee Malaysia இணையதளத்தைப் பார்க்கவும்.

 



Share