குழந்தைகளுக்கான கோவிட்-19 தடுப்பூசி

செவ்வாய்க்கிழமை / 22 பிப்ரவரி 2022

கோவிட்-19 இன் பரவலைக் குறைக்க, மலேசிய அரசாங்கம் 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி கவரேஜை விரிவுபடுத்துகிறது. அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் உட்பட சுமார் 4 மில்லியன் குழந்தைகள் தடுப்பூசி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உதவக்கூடிய விஷயங்கள்:

  • குழந்தைகளில் மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம்(Multisystem Inflammatory Syndrom) (MIS-C)* மற்றும் கோவிட்-19 நோய்த்தொற்றால் ஏற்படும் நீண்ட கோவிட்** ஆகியவற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும்.
  • குழந்தைகள் மற்றவர்களுடன் பாதுகாப்பாக பழக உதவும்.
  • மந்தை நோய் எதிர்ப்பு சக்தி மூலம் பள்ளிகள்/கற்றல் மையங்களில் கிளஸ்டர்களைக் குறைக்கும்.

இந்த வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் 8 வார இடைவெளியில் 2 டோஸ் ஃபைசரைப் பெறுவார்கள். இது பெரியவர்களுக்கு கொடுக்கப்படும் அளவைக் காட்டிலும் குறைக்கப்பட்ட டோஸ் மற்றும் தடுப்பூசி நன்கு பொறுத்துக் கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக டோஸ்களுக்கு இடையே நீண்ட இடைவெளி உண்டு.

இந்த திட்டத்தில் உங்கள் குழந்தைகளைச் சேர்ப்பது முற்றிலும் தன்னார்வமானது, ஆனால் அனைத்து பெற்றோர்களும் அல்லது பாதுகாவலர்களும் தங்கள் குழந்தைகளை கோவிட்-19 தொற்று மற்றும் நீண்ட கால விளைவுகளிலிருந்து பாதுகாக்க அவர்களைப் பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இதை, உங்கள் மை செஜதரா(MySejahtera) பயன்பாட்டைப் பயன்படுத்தி, உங்கள் குழந்தையை தன் சார்புடையவராக பதிவு செய்வதன் மூலம் நீங்கள் அவ்வாறு செய்யலாம். தற்போது, ​​இந்த தடுப்பூசி, தேர்ந்தெடுக்கப்பட்ட தடுப்பூசி மையங்களில் (பிபிவி/PPV) கிடைக்கிறது; அதாவது மருத்துவமனைகள், சுகாதார கிளினிக்குகள், ஒருங்கிணைந்த பிபிவி மற்றும் ஆஃப்-சைட் பிபிவி.

மலேசிய அகதி யூ டியூப் அலைவரிசையில்(Refugee Malaysia YouTube channel) அரபு, உருது, தமிழ், ரோஹிங்கியா, டெடிம் மற்றும் பாரசீக மொழிகளில் வீடியோ வழிகாட்டு கிடைக்கும் .

இதற்கிடையில், தொடர்ந்து விழிப்புடன் இருக்கவும், 3W-வை கடைபிடிக்கவும் மற்றும் 3C-ஐ தவிர்க்கவும்!

3W – வை கடைபிடிக்கவும்

  1. கைகளை கழுவவும்.
  2. முகமூடி(mask) அணியவும்.
  3. சம்பந்தப்பட்ட ஆணையாளர்களின் எச்சரிக்கைகளுக்கு விழிப்புடன் இருக்கவும்.

3C – ஐ தவிர்க்கவும்

  1. நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும்.
  2. வரையறுக்கப்பட்ட இடங்களைத் தவிர்க்கவும்.
  3. நெருக்கமான இட அளவில் உரையாடுவதை தவிர்க்கவும்.

சுவர் இதழ்: 3C-ஐ தவிர்க்கவும், 3W-வை கடைபிடிக்கவும்.

* குழந்தைகளில் மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம்(Multisystem Inflammatory Syndrom) (MIS-C) என்பது இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை, தோல், கண்கள் அல்லது இரைப்பை குடல் உறுப்புகள் உட்பட உடலின் பல்வேறு பாகங்கள் வீக்கமடையக்கூடிய ஒரு நிலையாகும். (ஆதாரம்: நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்)

** நீண்ட கோவிட் – கோவிட்-19-ஐ ஏற்படுத்தும் வைரஸால் முதலில் பாதிக்கப்பட்ட நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட வாரங்களுக்குப் பிறகும், பரந்த அளவிலான புதிய அல்லது திரும்பவும் வந்த அல்லது தொடர்ந்து வரும் உடல்நலப் பிரச்சனைகள். (ஆதாரம்: நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்)



Share