UNHCR அலுவலகம் வாக்-இன்கள்(walk-in) அல்லது நியமனம் இல்லாதவர்களுக்கு இன்னும் திறக்கப்படவில்லை.
கோவிட்-19 இன் நிலையான இயக்க முறைகளுக்கு(SOP) ஏற்ப, சந்திப்புகளுக்கு அலுவலகத்தை அணுக, மலேசியா முழுவதிலும் உள்ள அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களைUNHCR தற்போது தொடர்புகொண்டிருக்கிறது.
நியமனம் உள்ள அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோர்கள் மட்டுமே அலுவலகத்தை அணுகலாம். உங்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை என்றால் UNHCRக்கு வர வேண்டாம். UNHCR இலிருந்து உங்களுக்கு வந்த தொலைபேசி அழைப்பை நீங்கள் தவறியிருந்தால், நீங்கள் மீண்டும் அழைக்கப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். UNHCR இலிருந்து வந்த அழைப்பை தவறியதற்க்கு அலுவலகத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. உங்கள் UNHCR ஆவணத்தில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டால், அந்த காலாவதி தேதியில் அலுவலகத்தை அணுக வேண்டாம். உங்கள் ஆவணங்களை புதுப்பிப்பதற்கான சந்திப்பைத் திட்டமிட UNHCR உங்களை அழைக்கும் வரை காத்திருக்கவும்.
சந்திப்புக்கு நீங்கள் அழைக்கப்பட்டவுடன், அலுவலகத்தை அணுகுவதற்கான தேதி மற்றும் நேரம் உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் சந்திப்பிற்கு முன், உங்கள் சந்திப்பு தேதி மற்றும் நேரத்தை உறுதிப்படுத்தும் குறுந்தகவல் ஒன்றைப் பெறுவீர்கள். நீங்கள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, உங்கள் நியமனத்தை உறுதிப்படுத்தும் அந்த குறுந்தகவலை வரவேற்பு மையத்தில் காட்ட வேண்டும். நியமனங்கள் இல்லாமல் UNHCR க்கு வருபவர்கள் உடனடியாக வெளியேறும்படி கேட்கப்படுவார்கள்.
கோவிட்-19 SOP-களைப் பின்பற்ற, எல்லா நேரங்களிலும் முகமூடியை அணிவதை தயவுசெய்து கவனிக்கவும் சந்திப்புக்கு முன் அல்லது நியமனத்தின் நாளில் உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அலுவலகத்திற்கு வர வேண்டாம். UNHCR க்கு தெரிவிக்க பதிவு ஹாட்லைன் +60176143810 (08:00am-4:00pm / திங்கள் முதல் வெள்ளி வரை) அழைக்கவும், உங்கள் சந்திப்பு மீண்டும் திட்டமிடப்படும்.
உங்கள் தொலைபேசி எண் புதுப்பிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்து கொள்ளவும், அப்போதுதான் சந்திப்பைத் திட்டமிட UNHCR உங்களை அழைக்க முடியும். தொலைபேசி எண்களை இங்கே புதுப்பிக்கலாம்.
refugeemalaysia.org என்ற இணையதளம் மூலம் அலுவலகத்தை அணுகும் தொடர்பான ஏதேனும் தகவல் அல்லது மாற்றத்தை UNHCR தெரிவிக்கும், தயவுசெய்து அதைத் தவறாமல் சரிபார்க்கவும்.