உங்கள் குழந்தையை பதிவு செய்தல்
உங்களுக்கு தற்போது குழந்தை பிறந்திருந்தால், மலாய் மொழியில் ஜபதன் பென்டாஃப்தரன் நெகாரா (ஜேபிஎன்) என அழைக்கப்படும் அரசாங்கத்தின் தேசியப் பதிவுத் துறையின் எந்த உள்ளூர் அலுவலகத்திலும் நீங்கள் அவருடைய பிறப்பைப் பதிவுசெய்து, பிறப்புச் சான்றிதழைப் பெறலாம். குழந்தை பிறந்த 60 நாட்களுக்குள் இதைச் செய்தால் NRDயில் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இருப்பினும், 60 நாட்களுக்குப் பிறகு, தாமதமாகப் பதிவு செய்தால் உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படலாம்.
படி 1: பிறப்புப் பதிவுப் படிவத்தைப் பெறுங்கள்
குழந்தை பிறந்த மருத்துவமனையில் அல்லது தேசிய பதிவுத் துறையின் (NRD) உள்ளூர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களைப் பெறவும்.
படி 2: தேசிய பதிவுத் துறையை பார்வையிடவும்
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் தேசிய பதிவுத் துறையின் (NRD) உள்ளூர் அலுவலகத்திற்குச் செல்லவும். உங்களுக்கு பின்வருபவை தேவைப்படும்:
- அடையாள ஆவணங்கள் (UNHCR அட்டைகள் அல்லது பரிசீலனை கடிதம் / சமூக அட்டைகள் / கடவுச்சீட்டுகள்) – அசல் மற்றும் நகல்
- UNHCR இல் பதிவுசெய்யப்பட்ட பெற்றோருக்கு, தயவுசெய்து உங்கள் UNHCR அட்டை அல்லது பரிசீலனைக்கு உட்பட்ட (UC) கடிதத்தை NRD க்கு சமர்ப்பிக்கவும். நீங்கள் செல்லுபடியாகும் கடவுச்சீட்டை வைத்திருந்தால், கடவுச்சீட்டு விவரங்களை NRDக்கு வழங்கவும். பதிவேடு நோக்கங்களுக்காக கடவுச்சீட்டு விவரங்கள் உங்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் சேர்க்கப்படும். உங்கள் கடவுச்சீட்டு விவரங்கள் உங்கள் சொந்த நாடுகளுடன் பகிரப்படாது. உங்களின் UNHCR ஆவணம் காலாவதியாகிவிட்டதால் உங்கள் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழை உங்களால் பெற முடியவில்லை என்றால், உங்களின் UNHCR ஆவணங்கள் புதுப்பிக்கப்பட்டவுடன் அருகிலுள்ள NRD கிளை அலுவலகத்தை நீங்கள் மீண்டும் அணுகலாம்.
- பெற்றோரின் திருமணம் அல்லது விவாகரத்து சான்றிதழ் (பொருந்தும் ஆவணம்) – அசல் மற்றும் நகல்
மலேசிய மத அதிகாரிகள் அல்லது பிற அதிகாரப்பூர்வ பதிவு அதிகாரிகளால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ திருமணச் சான்றிதழ்களை மட்டுமே சட்டப்பூர்வ திருமணத்திற்கான சான்றாக NRD ஏற்றுக்கொள்கிறது என்பதை நினைவில் கொள்ளவும். சமூக திருமண சான்றிதழ்கள் NRD இல் ஏற்றுக்கொள்ளப்படாது நீங்கள் முஸ்லீமாக இருந்தால் மற்றும் அதிகாரப்பூர்வ திருமணச் சான்றிதழ் இல்லை என்றால், பிறப்புச் சான்றிதழில் தாயாரின் பெயர் மட்டுமே சேர்க்கப்படும். முஸ்லீம் அல்லாத பெற்றோருக்கு, அதிகாரப்பூர்வ திருமணச் சான்றிதழ் இல்லாமல் கூட தந்தையின் பெயரை பிறப்புச் சான்றிதழில் சேர்க்கலாம். - மருத்துவமனையில் இருந்து பிறப்பை உறுதிப்படுத்தும் ஆவணம், அல்லது வீட்டில் குழந்தை பிறந்திருந்தால் பொலிஸ் அறிக்கை – அசல்
- பூர்த்தி செய்யப்பட்ட பிறப்பு பதிவு விண்ணப்பப் படிவம் – அசல் மற்றும் நகல்
- பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனை புத்தகம் (மகப்பேறு பரிசோதனை புத்தகம்) அல்லது சந்திப்பு அட்டை – அசல்
- நீங்கள் திருமணமாகாத முஸ்லீம் அல்லாத தம்பதியராக இருந்தால், குழந்தையின் தந்தை என்று கூறிக்கொள்ளும் நபர் குழந்தையின் தாயுடன் பிறப்புப் பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும். இல்லையெனில், தந்தையின் தகவல் பிறப்புச் சான்றிதழில் சேர்க்கப்படாது.
- தாமதமான பிறப்புப் பதிவுக்கு, தேவையான ஆவணங்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, தயவுசெய்து JPN இணையதளத்தைப் பார்வையிடவும். மொழிபெயர்க்கப்பட்ட AM 80 மற்றும் BMK 81 படிவங்களை இங்கே காணலாம் (குறிப்புக்காக மட்டும்).
நினைவூட்டல் : உங்கள் சமூகத் தலைவருடன் சிக்கலின் விவரங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் (என்ன நடந்தது, எப்போது நடந்தது மற்றும் எந்த NRD கிளை சம்பந்தப்பட்டது) ஏதேனும் NRD கிளையில் நீங்கள் சிக்கல்களை சந்தித்தால் UNHCRக்கு தெரிவிக்கவும். முடிந்தால், தொடர்புடைய ஆவணங்களின் விவரங்கள் அல்லது படங்களைச் சேர்க்கவும்.
நினைவூட்டல்
மலாய் மொழி பேசும் நபர்
முடிந்தால் உங்களுக்கு உதவ மலாய் மொழி பேசும் நபரின் உதவியைப் பெறுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
தடுப்பு மையத்தில் பிறந்தவர்
ஒரு தாய் காவலில் இருக்கும் போது அவருக்கு குழந்தை பிறந்தால், தாய் மற்றும் குழந்தை இருவரும் குடிவரவு அதிகாரத்தின் பாதுகாவலில் இருப்பதால், அந்த தடுப்பு மையத்தின் குடிவரவு அதிகாரி, பிறப்பு பதிவு மற்றும் குழந்தையின் பிறப்பு சான்றிதழைப் பெற உதவ வேண்டும்.
பதிவு செய்யும் நபர்
பெற்றோர்கள், சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் அல்லது பிறப்பைப் பற்றி அறிந்த எந்தவொரு நபரும் தேவையான ஆவணங்களைக் கொண்டு வந்தால், பிறப்பைப் பதிவு செய்யலாம்.
தேசியப் பதிவுத் துறையின் (NRD) இருப்பிடம்
இங்கே பட்டியலிடப்பட்டுள்ள எந்த NRD அலுவலகத்திற்கும் நீங்கள் செல்லலாம். நீங்கள் கோலாலம்பூரில் வசிக்கிறீர்கள் என்றால், இந்த அலுவலகத்திற்குச் செல்லுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்:
NRD/JPN ஜலான் டுத்தா(Jalan Duta)
ஜலான் டுத்தா(Jalan Duta) அரசு கட்டிடம்
(துவாங்கு அப்துல் ஹலீம் அரசு வளாகம்)
பப்ளிகா டுத்தாமாஸ், 1, ஜலான் டுத்தாமாஸ், சோலாரிஸ் டுத்தாமாஸ்
50480 கோலாலம்பூர்
தேசியப் பதிவுத் துறை (NRD) அலுவலகங்களில் பிறப்புப் பதிவு நடைமுறையைப் புரிந்துகொள்ள, மலாய், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளிலும் இந்த வீடியோக்களை இங்கே நீங்கள் பார்க்கலாம்.
உங்கள் UNHCR கோப்பில் புதிதாகப் பிறந்த குழந்தையைச் சேர்த்தல்
நீங்கள் ஏற்கனவே UNHCR இல் பதிவுசெய்திருந்தால், உங்களுக்கு பிறந்தவரின் பிறப்புச் சான்றிதழ் மற்றும்/அல்லது பிற ஆதார ஆவணங்களை நீங்கள் ஏற்கனவே பெற்றிருந்தால், பிறப்புச் சான்றிதழ் மற்றும்/அல்லது தேவைப்படும் பிற ஆதார ஆவணங்களின் பிரதிகளை பதிவேற்றி, குடும்ப அமைப்பு மாற்றம் படிவத்தை நிரப்புவதன் மூலம் சமர்ப்பிக்கவும்.
கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, UNHCR எந்த வாக்-இன்களையும் (walk-ins) பெறவில்லை. சந்திப்பு இல்லாமல் UNHCR ஐ அணுக வேண்டாம். குடும்ப அமைப்பு மாற்றப் படிவத்தை நிரப்புவதன் மூலம் நீங்கள் சந்திப்பைக் கோரலாம் மற்றும் UNHCR உங்களை சந்திப்பிற்காக அழைக்கும் வரை காத்திருக்கவும்.