அறிவிப்பு (29 ஜூலை 2022)

வெள்ளிக்கிழமை / 29 ஜூலை 2022

அகதிகளின் தகவல்களை கண்காணிக்கும் அமைப்பு (TRIS) என்பது மலேசிய அரசாங்கத்தினால் மலேசியாவில் உள்ள அகதிகளைக் கண்காணிக்க செயல்படுத்தப்பட்ட திட்டமாகும்.

சமீபத்திய ஆண்டுகளில், அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட கூட்டுப் பணிக்குழு மூலம், UNHCR அகதிகள் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருகிறது. இந்த கலந்துரையாடலில் தரவுப் பகிர்வு, கூட்டுப் பதிவு மற்றும் சட்டபூர்வ பணிக்கான அணுகல் ஆகியவை அடங்கும். சமீபத்திய உரையாடல்களில் TRIS பற்றிய எந்தத் தகவலும் சேர்க்கப்படவில்லை, எனவே UNHCR விளக்கம் கேட்டுக்கொண்டிருக்கும் பட்ச்சத்தில் மேற்கொண்டு ஆலோசனை வழங்க முடியாது.

உலகெங்கிலும் உள்ள அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்க UNHCR கட்டாயத்தில் உள்ளது. அனைத்து UNHCR சேவைகளும் இலவசம், UNHCR ஆவணங்களை வழங்குதல் உட்பட. சம்பந்தப்பட்ட நபர்களின் தரவைக் கையாளும் போது UNHCR அதன் தரவுப் பாதுகாப்புக் கொள்கையை கடைபிடிக்கிறது.
அகதிகள் பாதுகாப்பு தொடர்பாக மலேசியாவிற்கு இதிலும் மற்றும் சம்பந்தப்பட்ட பிற பகுதிகளில் மலேசிய அரசாங்கத்திற்கு ஆக்கபூர்வமான ஈடுபாடு மற்றும் ஆதரவை UNHCR தொடர்ந்து வரவேற்கிறது.Share