மோசடிகளில் ஜாக்கிரதை: ரோஹிங்கியா யூடியூபர்

திங்கட்கிழமை / 04 டிசம்பர் 2023

UNHCR செயல்முறைகளுக்கான அணுகலை வழங்க முடியும் எனக் கூறும் ஒரு ரோஹிங்கியா நபரை யூடியூப்பில் UNHCR அடையாளம் கண்டுள்ளது. இந்த நபர் UNHCR உடுப்பை அணிந்திருக்கும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார், அவர் UNHCR ஊழியர் மற்றும்/அல்லது UNHCR உடன் இணைக்கப்பட்டவர் என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளார். இந்த வீடியோக்களில், ஒரு இணைப்பு மூலம் UNHCR சேவைகளுக்கு விண்ணப்பிக்க தனிநபர்களை ஊக்குவிக்கிறார். IOM சின்னத்தைப் பயன்படுத்தி இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) பக்கத்திற்கான இணைப்பையும், UNHCR சின்னத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட விவரங்களைக் கோரும் WhatsApp பக்கத்தையும் அவர் வழங்கியுள்ளார்.

இது ஒரு மோசடி. இந்த நபர் UNHCR அல்லது IOM பணியாளர் அல்ல. அவர் UNHCR அல்லது IOM உடன் இணைக்கப்படவில்லை. UNHCR ஆவணங்களை வழங்கவோ அல்லது யாரிடமிருந்தும் தனிப்பட்ட தகவல்களைக் கோரவோ அவருக்கு அதிகாரம் அல்லது தகுதி இல்லை.

UNHCR மற்றும் IOM உங்களிடம் பணம் கேட்காது என்பதையும் நினைவில் கொள்ளவும். பணத்திற்கு ஈடாக UNHCR ஆவணங்களைப் பெறவும், UNHCR அல்லது IOM செயல்முறைகளை அணுகவும் அல்லது உங்கள் வழக்கை விரைவாகக் செயல்படுத்தவும் உதவ முடியும் எனக் கூறும் நபர்களிடம் கவனமாக இருங்கள். உங்கள் தனிப்பட்ட தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

பணத்திற்கு ஈடாக UNHCR சேவைகளை (UNHCR ஆவணங்கள், பதிவு, RSD, மீள்குடியேற்றம் போன்றவை) வழங்க முடியும் எனக் கூறும் நபர்களை நீங்கள் கண்டால், இதை இங்கே புகாரளிக்கவும்:

உங்கள் UNHCR அட்டை ரத்து செய்யப்படாது, மேலும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளை UNHCR க்கு புகாரளித்தால் உங்கள் வழக்கு தாமதம் ஆகாது அல்லது மூடப்படாது.

UNHCR இன் செயல்முறைகள் மற்றும் உதவி பற்றிய கூடுதல் தகவலுக்கு, Refugee Malaysia இணையதளத்தைப் பார்க்கவும்.



Share