உங்கள் UNHCR எண்ணை நினைவில் கொள்ளுங்கள்

புதன்கிழமை / 07 டிசம்பர் 2022

உங்கள் UNHCR கோப்பு எண் மற்றும் தனிப்பட்ட எண்ணை நீங்கள் நினைவில் வைத்திருப்பதை உறுதி செய்யவும். உங்கள் UNHCR ஆவணத்தை தொலைத்துவிட்டால் அல்லது அதிகாரிகள் உங்கள் விவரங்களைக் கேட்டால், உங்கள் UNHCR எண்களை மனப்பாடம் செய்வது அல்லது வசதியான இடத்தில் பதிவு செய்து வைத்திருப்பது முக்கியம். உங்கள் UNHCR கோப்பு எண் மற்றும் தனிப்பட்ட எண்ணை அறிந்துகொள்வது UNHCRக்கு உங்கள் அடையாளத்தை சரிபார்ப்பதில் உதவுகிறது.

அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் அனைவரும், தங்கள் UNHCR ஆவணத்தின் புகைப்படத்தை எடுத்து, எளிதாக அணுகுவதற்காக தங்கள் தொலைபேசியில் சேமித்து வைக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

உங்களின் UNHCR ஆவணங்களை எப்பொழுதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

UNHCR ஆவணங்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, UNHCR ஆவணங்களைப் பார்வையிடவும்.Share