குழந்தை பாதுகாப்பு
அகதிகள் மற்றும் புகலிடம் தேடும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாதிப்பிலிருந்து பாதுகாப்பதில் UNHCR உறுதியாக உள்ளது. துஷ்பிரயோகம் செய்யப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கு உதவ நாங்கள் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம்; குழந்தைகள் பாதுகாப்பு சம்பவத்தைப் புகாரளிக்க விரும்பும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்; மீழ்ந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களை சட்ட ஆலோசனை மற்றும் தலையீடுகள், உளவியல் ஆதரவு, பாதுகாப்பான இடங்கள் மற்றும் கல்வி ஆகியவற்றுடன் இணைக்கிறோம். ஆபத்தில் உள்ள ஒரு அகதி அல்லது புகலிடம் தேடும் குழந்தை உங்களுக்குத் தெரிந்தால், கீழே பட்டியலிடப்பட்டுள்ள UNHCR கூட்டாளர்களில் ஒருவரைத் தொடர்பு கொள்ளவும்.
கூட்டாளர் நிறுவனங்கள்
Target Group: 17 and below based on HOST's intake criteria
Language: English, Malay, Rohingya
Operating Hours: Monday-Friday (9.00am-5.00pm) Area: Sentul, Kuala Lumpur
Target Group: 5-17 years old
Language: English, Malay, Burmese, Urdu
Operating Hours: Monday-Friday (8.00am-6.30pm) Area: Klang
Target Group: All children
Language: English, Malay
Operating Hours: Monday-Friday (9.00am-5.00pm) Area: Johor
Target Group: All children
Language: English, Malay and Rohingya
Operating Hours: 8.30am-4.30pm, Monday-Friday Area: Nationwide
Target Group: 6-17 years old
Language: Malay, English
Operating Hours: Monday-Sunday (6.00pm-12.00am)
Area: Klang Valley
Target Group: 10–17 years old
Language: English, Malay, Rohingya
Operating Hours: Monday-Friday (9.00am-5.00pm) Details:
Area: Sentul, Kuala Lumpur
Target Group: 5-17 years old
Language: English, Malay, Burmese, Urdu
Operating Hours: Monday-Friday (8.00am-6.30pm) Details:
Area: Klang
Target Group: All children
Language: English, Malay
Operating Hours: Monday-Friday (9.00am-5.00pm) Details:
Area: Johor
Target Group: All children
Language: English, Malay and Rohingya
Operating Hours: 8.30am-4.30pm, Monday-Friday Details:
Area: Nationwide
Target Group: 6-17 years old
Language: Malay, English
Operating Hours: Monday-Sunday (6.00pm-12.00am)
Case management, mental health and psychosocial support services, community-based interventions, referrals to appropriate services Services:
Case management, mental health and psychosocial support services, linkages to education programmes, referrals to appropriate services Services:
Case management, mental health and psychosocial support services, shelter, and referrals to appropriate services Services:
Case management and referrals to appropriate services Services:
Mental health and psychosocial support services
அரசு சேவைகள்.
சந்தேகத்திற்கிடமான குழந்தை துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்புக்கு அவசர உதவி தேவைப்படும் பட்சத்தில், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை ஒரு-இட சேவை மையம் (OSCC) மற்றும்/அல்லது சந்தேகிக்கப்படும் குழந்தை துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு (SCAN) குழுவின் உதவியைப் பெறவும்.
மாற்றாக, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பைப் புகாரளிக்க மலேசியாவின் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தால் இயக்கப்படும் தலியான் காசிஹ் ஹாட்லைனை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
தலியான் காசிஹ்(Talian Kasih)
காவல்துறை
நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த குழந்தை பாலியல் பலாத்காரம், பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் துன்புறுத்தல் போன்ற குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்தை அனுபவித்திருந்தால், காவல்துறையிடம் புகாரளிப்பதன் மூலம் உதவியை நாடலாம். காவல்துறையில் புகார் செய்ய, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:
- முடிந்தால், குழந்தையுடன் ஒரு பெரியவரும், அருகில் உள்ள காவல் மாவட்டத் தலைமையகத்திற்கு (IPD என்றும் அழைக்கப்படுகிறது) சென்று புகார் அளிக்க வேண்டும். இந்த பெரியவர், குழந்தை நம்பும் ஒருவராக இருக்க வேண்டும், மேலும் பெற்றோராக, பாதுகாவலராக, உறவினராக, சமூகத் தலைவராக அல்லது ஆசிரியராக இருக்கலாம்.
- புகார் செய்யும் போது பெரியவர் மற்றும் குழந்தை இருவரும் அடையாள ஆவணங்களை IPD க்கு கொண்டு வர வேண்டும்.
- போலீஸ் அறிக்கைகள் மலாய் மொழி அல்லது ஆங்கிலத்தில் செய்யப்பட வேண்டும். இந்த அறிக்கையில், என்ன நடந்தது, சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரம், எங்கு நடந்தது, யார் முறைகேடு செய்தார்கள் என்ற விவரங்கள் இருக்கும்.
- உங்களுக்கோ அல்லது அக்குழந்தைக்கோ மலாய் மொழி அல்லது ஆங்கிலம் பேச முடியாவிட்டால், மலாய் மொழி அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க உதவுவதற்கு நீங்களும் குழந்தையும் நம்பும் ஒருவரை அழைத்து வர முயற்சிக்கவும்.
- IPD இல் உள்ள விசாரணை அதிகாரி (IO) குழந்தையின் அறிக்கையை எடுத்து, குழந்தையுடன் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்வார், அங்கு அவர்/அவள் குழந்தை பாலியல் துஷ்பிரயோக வழக்குகளைக் கையாள பயிற்சி பெற்ற மருத்துவ மற்றும் சமூகப் பணியாளர்களைச் சந்திப்பார். அவர்கள் SCAN (சந்தேகத்திற்கிடமான சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு) குழு என அறியப்படுகின்றனர்.
- இந்த SCAN குழு அக்குழந்தையை ஒரு தனி அறையில் மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவ மற்றும் ஆதரவு சேவைகளை வழங்கும். சமூக நலத்துறை (ஜேகேஎம்(JKM) என்றும் அழைக்கப்படுகிறது) மற்றும் என்ஜிஓக்களுக்கு(NGO) குழந்தையைப் பரிந்துரைப்பதும் இதில் அடங்கும்.
ஒரு குழந்தைக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் வழக்கு மேலாண்மை சேவைகள்(case managemant services) தேவைப்பட்டால், அவர்கள் மேலே உள்ள தொடர்புத் தகவல் மூலம் UNHCR இன் குழந்தை பாதுகாப்பு கூட்டாளர்களுடன் இணைக்கப்படலாம்.
குழந்தை பாதுகாப்பு தொடர்பான பொருட்கள்
குழந்தைகள் பாதுகாப்பு வெபினார்