பாலின அடிப்படையிலான வன்முறை

பாலின அடிப்படையிலான வன்முறை என்றால் என்ன

பாலின அடிப்படையிலான வன்முறை (GBV) என்பது பாலினத்தின் காரணமாக ஒருவருக்கு ஏற்படும் தீங்கு. இதில் வற்புறுத்தல், அச்சுறுத்தல்கள், பொய்கள், கலாச்சார அழுத்தங்கள் அல்லது பணம் ஆகியவை அடங்கும். பெரும்பாலும், பெண்கள் GBVயால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், LGBTIQ+ நபர்கள், சிறுவர்கள் மற்றும் ஆண்களும் பாதிக்கப்படலாம். அனைத்து வகையான பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளும் ஒருவரின் மனித உரிமைகளை மீறுகின்றன. இத்தகைய செயல்களில் பலது குற்றங்கள் ஆகும் மற்றும் மலேசிய சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படலாம்.

பாலின அடிப்படையிலான வன்முறை வகைகள்

பாலியல் வன்முறை என்பது பாதிக்கப்பட்டவரின் அனுமதியின்றி செய்யப்படும் எந்தவொரு பாலியல் செயலாகும். இதில் கற்பழிப்பு, பாலியல் துஷ்பிரயோகம், துன்புறுத்தல், தன்னலப் பயன்படுத்தல் மற்றும் கட்டாய விபச்சாரம் ஆகியவை அடங்கும். கணவன்-மனைவி இடையே ஒருவர் பாலியல் செயலுக்கு உடன்படவில்லை என்றாலும் இது நிகழலாம். சிறுவர்களுடன் (18 வயதுக்கு குறைவான ஒருவர்) எந்தவொரு பாலியல் செயலும் பாலியல் வன்முறையாகும். இது அச்சிறுவர்களின் வளர்ச்சியையும் ஆரோக்கியத்தையும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கிறது.

உடல் ரீதியான வன்முறை என்பது ஒருவரை உடல் ரீதியாக காயப்படுத்துவது – எடுத்துக்காட்டாக, அடித்தல், குத்துதல், தீவிரமாக காயப்படுத்துதல் அல்லது கொலை செய்தல். இது பெரும்பாலும் உணர்ச்சி மற்றும் உளவியல் தீங்கு விளைவிக்கும் அதே நேரத்தில் நிகழ்கிறது.

உணர்ச்சி அல்லது உளவியல் வன்முறை என்பது ஒருவரை அவமானப்படுத்துவது அல்லது வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்வது. ஒரு பெண் பலவீனமானவர் என்று அழைக்கப்படுவது அல்லது அவள் ஒரு பெண் என்பதால் சபிக்கப்படுவது ஒரு உதாரணம் ஆகும். ஒரு நபரை அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து விலக்கி வைப்பது அல்லது அவர்கள் எங்கு செல்லலாம் என்பதைக் கட்டுப்படுத்துவது, இதன் பொருளாக இருக்கக்கூடும்.

சமூக-பொருளாதார வன்முறை என்பது ஒரு நபர் அன்றாட நடவடிக்கைகளைச் செய்வதிலிருந்து தடுக்கப்படுவது, உதாரணமாக, பெண்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படாமல் இருப்பது அல்லது பெண்கள் சுகாதார சேவை பெறுவதை தடுப்பது அல்லது வேலைக்கு செல்வதை தடுப்பது.

குடும்ப வன்முறை என்பது ஒரு குடும்ப உறுப்பினர் மற்றொரு குடும்ப உறுப்பினருக்கு செய்யும் தீங்கு. அது உடல், பாலியல், உணர்ச்சி, வாய்மொழி அல்லது பொருளாதார வன்முறையாக இருக்கலாம். பெற்றோர், வாழ்க்கைத் துணைவர்கள், முன்னாள் வாழ்க்கைத் துணைவர்கள் , அவர்கள் ஒன்றாக வாழ்ந்தாலும் இல்லாவிட்டாலும் இதைச் செய்யலாம்.

தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளில் பெண் விருத்தசேதனம், கௌரவக் கொலைகள், பலதார மணம் (ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுடன் திருமணம்), குழந்தை திருமணம் (18 வயதுக்கு குறைவானவர்கள்) மற்றும் கட்டாய திருமணம் ஆகியவை அடங்கும்.

பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்தை எவ்வாறு புகாரளிப்பது

பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைகள் மற்றும் அனைத்து ஐக்கிய நாடுகள் மற்றும் NGO கூட்டாளர்களின் ஊழியர்களுக்கும் தடைசெய்யப்பட்டுள்ளது.

பாலியல் சுரண்டல் என்றால் என்ன?

பாலியல் நோக்கங்களுக்காக பாதிக்கப்படக்கூடிய நிலை, அதிகாரத்தின் சக்தி அல்லது நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்துதல். உதாரணத்திற்கு, ஒரு ஆசிரியர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு அகதிக் குழந்தையை பாலியல் செயலில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்துவது அல்லது ஒரு அகதி அவர்களுடன் உடலுறவு கொள்ளாத வரையில் உதவிப் பணியாளர் மிகவும் தேவையான சேவைகளை நிறுத்தி வைப்பது. கடத்தல் மற்றும் விபச்சாரமும் இதில் அடங்கும்.

பாலியல் துஷ்பிரயோகம் என்றால் என்ன?

வலுக்கட்டாயமாகவும் சமமற்ற அல்லது கட்டாய நிலைமைகளின் கீழ் எந்தவொரு உண்மையான அல்லது அச்சுறுத்தப்பட்ட பாலியல் செயல்பாடு மேற்கொள்ளப்படுவது. இதில் கற்பழிப்பு, பாலியல் தாக்குதல் அல்லது வாய்மொழி பாலியல் துன்புறுத்தல் ஆகியவை அடங்கும்.

பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் யாருக்கும் ஏற்படலாம் – ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், எந்த வயதினருக்கும், ஊனமுற்றோ அல்லது இல்லாமலோ, பாலியல் சார்பு அல்லது பாலின அடையாளத்தைப் பொருட்படுத்தாமல், எந்த சூழ்நிலையிலும்.

ஐக்கிய நாடுகளின் நடத்தைத் தரங்களுக்கு இணங்க, UNHCR மற்றும் NGO கூட்டாளர்களின் ஊழியர்கள் செய்யக்கூடாது :

  • பணம், வேலைவாய்ப்பு, முன்னுரிமையுடன் நடத்துவதற்கு, பொருட்கள் அல்லது சேவைகளுக்கு ஈடாக யாருடனும் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவது.
  • 18 வயதுக்குட்பட்ட எவருடனும் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவது.
  • வேறு எந்த வகையான பாலியல் அவமானகரமான, இழிவான அல்லது சுரண்டல் நடத்தையில் ஈடுபடுவது.

UNHCR, UN, NGO கூட்டாளர்களின் பணியாளர்கள் அல்லது அகதிகள் கற்றல் மையங்கள் அல்லது சமூக அமைப்புகளின் பணியாளர்களால் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான சாத்தியமான வழக்குகள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருந்தால், சந்தேகங்கள் இருந்தால், தயவு செய்து இதை நேரடியாக மகளிர் உதவி அமைப்புக்கு (Women’s Aid Organization) (WAO) தெரிவிக்கவும். இது பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோக புகார்களைப் பெறுவதில் UNHCR இன் பங்குதாரர்:

  • WAO ஹாட்லைன்: +603 3000 8858 (காலை 8-இரவு 10 மணி)
  • எஸ்எம்எஸ் / வாட்ஸ்அப் TINA: +6018 988 8058 (24 மணிநேரம்)

UNHCR தலைமையகத்தில் உள்ள UNHCR இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகத்திற்கு (Inspector General’s Office) (IGO) நீங்கள் இதை நேரடியாகப் புகாரளிக்கலாம்:

ஒரு புகார் செய்யும்பொழுது, ​​நீங்கள் சேர்க்க வேண்டியது:

  1. என்ன நடந்தது?
      • சம்பவம்(கள்) பற்றி உங்களுக்கு என்ன தெரியும்
  2. குற்றம் சாட்டப்பட்ட தவறு யார் செய்தது?
      • முடிந்தால், முழுப் பெயர்கள், வேலைப் பதவி மற்றும் நிறுவனம் மற்றும் வேறு ஏதேனும் ஈடுபாடு பற்றிய தகவலை வழங்கவும்
  3. சம்பவம் (கள்) எப்போது, ​​எங்கு நடந்தது?
      • முடிந்தால், தேதிகள் மற்றும் நேரங்களைச் சேர்க்கவும்

உங்கள் அறிக்கையானது விவேகத்துடன் நடத்தப்படும் மற்றும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் மற்றும் உங்கள் UNHCR வழக்கைப் பாதிக்காது குற்றச் செயல் நடந்திருந்தால், காவல் துறையிலும் புகார் அளிக்கலாம். அனைத்து புகார்தாரர்களும் காட்டிக் கொடுப்பவர்களும் ஆதரவு சேவைகள் மற்றும் உதவிகளுடன் இணைக்கப்படுவார்கள்.

குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, கட்டாய அல்லது குழந்தை திருமணம், துன்புறுத்தல் அல்லது ஆட்கடத்தல் போன்ற பாலின அடிப்படையிலான வன்முறையை (GBV) அனுபவித்த எந்த அகதி அல்லது புகலிடக் கோரிக்கையாளரையும் UNHCR ஆதரிக்க முயல்கிறது. உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவருக்கோ GBV உதவி தேவைப்பட்டால், கீழே பட்டியலிடப்பட்டுள்ள UNHCR கூட்டாளர்களில் ஒன்றை தொடர்பு கொள்ளவும்.

கூட்டாளர் நிறுவனங்கள்

Organisation Women’s Aid Organisation (WAO) International Catholic Migration Commission (ICMC) Rohingya Society of Malaysia (RSM) Médecins Sans Frontières (MSF)
Details Area: Klang Valley, Kedah and Johor

Language: English, Bahasa Malaysia, Burmese, Hakha, Tedim, Falam, Zaniat, Mizo, Kachin, Rohingya, Somali, Arabic, Swahili, Persian and Dari

Operating Hours: 24 hours, Monday to Sunday Area: Klang Valley, Penang, Perak and Kedah

Language: Rohingya, Burmese, Arabic, Somali

Operating Hours: 9.00am-9.00pm, Monday to Sunday Area: Klang Valley

Language: English, Rohingya, Burmese

Operating Hours: 9.00am-9.00pm, Monday to Sunday Area: Penang

Language: English, Bahasa Malaysia, Rohingya, Burmese

Operating Hours: 9.00am-10.00pm, Monday to Sunday

Services Case management, assistance making police report, connecting with medical aid, mental health support, shelter Case management, mental health and psychosocial support services, shelter, referrals to appropriate services Referrals to appropriate service Clinical case management, mental health and psychosocial support services, referrals to appropriate services
Women’s Aid Organisation (WAO) International Catholic Migration Commission (ICMC) Rohingya Society of Malaysia (RSM) Médecins Sans Frontières (MSF)
Details

Area: Klang Valley, Kedah and Johor

Language: English, Bahasa Malaysia, Burmese, Hakha, Tedim, Falam, Zaniat, Mizo, Kachin, Rohingya, Somali, Arabic, Swahili, Persian and Dari

Operating Hours: 24 hours, Monday to Sunday Details

Area: Klang Valley, Penang, Perak and Kedah

Language: Rohingya, Burmese, Arabic, Somali

Operating Hours: 9.00am-9.00pm, Monday to Sunday Details

Area: Klang Valley

Language: English, Rohingya, Burmese

Operating Hours: 9.00am-9.00pm, Monday to Sunday Details

Area: Penang

Language: English, Bahasa Malaysia, Rohingya, Burmese

Operating Hours: 9.00am-10.00pm, Monday to Sunday

Services

Case management, assistance making police report, connecting with medical aid, mental health support, shelter Services

Case management, mental health and psychosocial support services, shelter, referrals to appropriate services Services

Referrals to appropriate service Services

Clinical case management, mental health and psychosocial support services, referrals to appropriate services

அரசு சேவைகள்.

காவல்துறை

எந்தவொரு அச்சுறுத்தல் அல்லது GBV சம்பவத்தையும் எந்த காவல் நிலையத்திலும் புகாரளிக்க உங்களுக்கு உரிமை உண்டு. காவல்துறையில் புகார் அளிக்கும் போது உங்களின் அடையாள ஆவணங்களைக் கொண்டு வர மறக்காதீர்கள்.

போலீஸ் அறிக்கைகள் மலாய் அல்லது ஆங்கில மொழியில் மட்டுமே செய்ய முடியும். என்ன நடந்தது, நிகழ்ந்த தேதி மற்றும் நேரம், எங்கு நடந்தது, வன்முறையை யார் செய்தார்கள் என்ற விவரங்கள் அறிக்கையில் இருக்கும். உங்களால் பஹாசா மலேசியா அல்லது ஆங்கிலம் பேச முடியாவிட்டால், உங்கள் அறிக்கையை பஹாசா மலேசியா அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க உதவக்கூடிய நீங்கள் நம்பும் ஒருவரை அழைத்துச் செல்ல முயற்சிக்கவும்.

WAO போன்ற UNHCR கூட்டாளர்கள், போலீஸ் அறிக்கையை எப்படி செய்வது என்பது பற்றிய கூடுதல் தகவல்களை வழங்க முடியும். என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய கூடுதல் தகவலைப் பெறுவதற்கு, புகார் செய்வதற்கு முன் நீங்கள் WAO க்கு 03-3000-8858 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது 018-988-8058 என்ற எண்ணுக்கு SMS/WhatsApp அனுப்பலாம். WAO இணையதளத்தில் பலாத்காரம் அல்லது பாலியல் வன்கொடுமை அல்லது குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய முடியும் என்பது பற்றிய கூடுதல் தகவல்கள் உள்ளன, ஆனால் தகவல் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.

ஒன் ஸ்டாப் க்ரைஸிஸ் சென்டர் (One Stop Crisis Centre) (OSCC)

பெரும்பாலான அரசு மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஒன் ஸ்டாப் க்ரைஸிஸ் சென்டர்கள் உள்ளன. OSCC ஐ அணுகும் GBV வன்முறையில் இருந்து தப்பியவர்கள் உடல் பரிசோதனை, மருத்துவ சிகிச்சை மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கான சோதனை ஆகியவற்றைப் பெறலாம். காவல்துறை மற்றும் தங்குமிடம் மற்றும் ஆலோசனை சேவைகளுடன் உங்களை இணைக்க OSCC உங்களுக்கு உதவும்.

OSCC சேவைகள் பற்றிய கூடுதல் தகவல்களை WAO இணையதளத்தில் காணலாம், ஆனால் தகவல் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.

தொடர்புடைய பொருட்கள்