மோசடி மற்றும் ஊழல்

மோசடி என்பது உங்களுக்காகவோ அல்லது வேறு ஒருவருக்காகவோ எதையாவது பெறுவதற்காக வேறொருவரை நம்ப வைப்பதற்காக முழு உண்மையையும் சொல்லாத செயலாகும். மோசடி என்பது உங்கள் அடையாளத்தைப் பற்றிய முழு உண்மையை சொல்லாமல் இருப்பது அல்லது முழு உண்மையை மறைப்பதும் ஆகும்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் தனிப்பட்ட லாபத்திற்காக நேர்மையற்ற முறையில் நடந்து கொள்ளும்போது ஊழல் நடக்கிறது. புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளிடமிருந்து பரிசுகள் மற்றும் பணத்தைப் பெறுவது ஊழலின் எடுத்துக்காட்டுகள். இது எதையாவது பெறுவது மட்டுமல்ல. பிற நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து மதிப்புள்ள எதையும் வழங்குவதும் கேட்பதும் இதில் அடங்கும்.

சுரண்டல் திட்டங்கள்

ஒரு சுரண்டல் திட்டம் என்பது, நபர்கள் அல்லது நபர்களின் குழுக்கள், UNHCR உடன் சிறப்பு இணைப்புகள் இருப்பதாக பொய்யாக கூறி, மதிப்புமிக்க, பொதுவாக பணத்திற்கு ஈடாக பதிவு, UNHCR ஆவணங்கள் மற்றும் மூன்றாம் நாட்டிற்கு மீள்குடியேற்றம் போன்ற பலன்களை உறுதியளிக்கிறது. இதுபோன்ற திட்டங்கள் மூலம் ஏராளமான அகதிகளிடமிருந்து பெருந்தொகைகள் ஏமாற்றப்பட்டுள்ளன.

சுரண்டல் திட்டங்களின் எடுத்துக்காட்டுகளில், UNHCR அல்லது மீள்குடியேற்ற நாடுகளுடன் இணைக்கப்பட்டிருப்பதாகக் கூறிக்கொள்ளும் நபர்கள் UNHCR பதிவு, ஆவணங்கள், RSD அல்லது மீள்குடியேற்றம் போன்றவற்றைப் பெறுவதற்கு பணம் கேட்பதை அடங்கும்.

அனைத்து UNHCR சேவைகளும் இலவசம் என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளவும். UNHCR இலிருந்து எந்தவொரு சேவையையும் அல்லது விரைவாக சேவையை பெற நீங்கள் பணம் செலுத்த முடியாது.

மலேசியாவில் அகதிகள் சமூகத்திற்கிடையே சுரண்டல் மோசடிகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, மோசடிகளில் ஜாக்கிரதை பக்கத்தைப் பார்வையிடவும்.

மோசடி மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டம்

மோசடி மற்றும் ஊழலுக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை

அனைத்து வகையான மோசடி மற்றும் ஊழலுக்கும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் UNHCR கொண்டுள்ளது.

UNHCR சேவைகள் எப்போதும் இலவசம்

UNHCR சேவைகள் அனைத்தும் எப்போதுமே இலவசம். UNHCR இலிருந்து விரைவான சேவைகளைப் பெற நீங்கள் பணம் செலுத்த முடியாது

ஊழலுக்கு மறுப்பு சொல்லுங்கள்

பணம் செலுத்துவதும் பெறுவதும் அல்லது UNHCR சேவைகளைப் பெறுவதற்காக யாரேனும் ஏதாவது செய்வது தவறானது

ரிஸ்க், இன்டெக்ரிட்டி மற்றும் மேற்பார்வை குழு (Risk, Integrity and Oversight Team) (RIOT)

UNHCR மலேசியாவில் உள்ள Risk, Integrity and Oversight Team (RIOT) மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டுள்ள அகதிகள் மீதான விசாரணைகளை மேற்கொள்கிறது மற்றும் மோசடி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது.

புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள், UNHCR கூடாலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மோசடி விழிப்புணர்வு மற்றும் புகாரளிப்பது பற்றிய பயிற்சியையும் RIOT நடத்துகிறது

UNHCR ஊழியர்கள் அல்லது கூட்டாளர் மேல் புகாரளிப்பது

UNHCR அனைத்து வகையான மோசடி மற்றும் ஊழலுக்கும் ஒரு பூஜ்ய சகிப்புத்தன்மைக் கொள்கையைக் கொண்டுள்ளது, மேலும் எவராயினும், அதன் சொந்த ஊழியர்கள் மற்றும் கூட்டாளர்களால் செய்யப்படும் மோசடியை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது.

UNHCR ஊழியர்கள் மற்றும்/அல்லது UNHCR கூட்டாளர் நிறுவனங்கள் செய்த மோசடி மற்றும் ஊழல் பற்றிய தகவல் உங்களிடம் இருந்தால், தயவு செய்து ஜெனிவாவில் உள்ள UNHCR இன் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகத்திற்கு (IGO) புகாரளிக்கவும். IGOவின் ஆன்லைன் புகார் படிவம் அல்லது inspector@unhcr.org என்ற மின்னஞ்சல் மூலம் இதைச் செய்யலாம்.

IGO, அனைத்து அறிக்கைகளையும் கண்டிப்பாக ரகசியமாக வைத்திருக்கும்.

புகலிடம் கோருவோர் அல்லது அகதிகள் பற்றி புகாரளிப்பது

புகலிடக் கோரிக்கையாளர் அல்லது அகதிகள் செய்த மோசடி மற்றும் ஊழல் பற்றிய ரகசிய அறிக்கையை உருவாக்க இரண்டு (2) வழிகள் உள்ளன.