நிரப்பு பாதைகள்
நிரப்பு பாதைகள் என்பது அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள், மீள்குடியேற்றத்தை தவிர மூன்றாம் நாட்டிற்குள் நுழைவதற்கும் தங்குவதற்கும் பாதுகாப்பான வழிகளாகும். அத்தகைய வாய்ப்புகள் மூலம் ஏற்றுக்கொள்ளும் அளவுகோல்களை ஒவ்வொரு நாடும் அமைக்கிறது. அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் UNHCR பரிந்துரையின்றி நேரடியாக விண்ணப்பிக்கலாம். இதில் UNHCR இன் பங்கு, சரிபார்க்கப்பட்ட வாய்ப்புகள், அளவுகோல்கள் மற்றும் விண்ணப்ப செயல்முறைகள் பற்றிய தகவல்களைப் பரப்புவதாகும். இந்த வாய்ப்புகளுக்காக தனிநபர்களையோ அல்லது செயலாக்க விண்ணப்பங்களையோ UNHCR பரிந்துரைப்பதில்லை.
மூன்றாம் நாட்டில் ஏற்கனவே வசிக்கும் குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் ஒரு விண்ணப்பத்தை தொடங்குவது பெரும்பாலான நிரப்பு பாதைகளுக்கு தேவைப்படுகிறது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட பாதை அல்லது திட்டத்தில் ஆர்வமாக இருந்தால், அகதிகளுக்கு உதவி செய்யும் அவர்களின் அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்களை (NGOs) அணுகுமாறு மூன்றாம் நாட்டில் உள்ள உங்கள் தொடர்பைக் கேளுங்கள். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், தொடர்புடைய தூதரகம்/உயர் ஆணையத்திடம் உதவி பெறவும்.
இந்த நாடுகளில் ஏதேனும் ஒன்றில் உங்களுக்கு உறவினர்கள் இருந்தால், குடும்ப மறு ஒருங்கிணைப்புத் திட்டத்தின் மூலம் அவர்களுடன் இணைவதில் அவர்கள் உங்களுக்கு எப்படி உதவ முடியும் என்பதைப் புரிந்து கொள்ள விரும்பினால், மேலும் தகவலுக்கு அந்தந்த நாட்டின் பெயரைக் கிளிக் செய்யவும்:உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஏற்றுக்கொண்டது பற்றி UNHCRக்கு தெரிவிக்கும் முன், தயவுசெய்து உங்கள் விமான டிக்கெட்டை வாங்க வேண்டாம். நீங்கள் மலேசியாவிலிருந்து வெளியேறுவதற்கு முன் பின்பற்ற வேண்டிய பல படிகள் உள்ளன, அவை எதிர்பார்த்தபடி செல்லவில்லை என்றால், உங்கள் விமான டிக்கெட் வீணாகிவிடும்.
குடும்ப மறு ஒருங்கிணைப்பு
கீழே பட்டியலிடப்பட்டுள்ள நாடுகள் அகதிகளுக்கு குடும்ப மறு இணைப்பு வாய்ப்புகளை வழங்குகின்றன. இந்த நாடுகளில் ஏதேனும் ஒன்றில் உங்களுக்கு உறவினர்கள் இருந்தால், குடும்ப மறு ஒருங்கிணைப்புத் திட்டத்தின் மூலம் அவர்களுடன் இணைவதில் அவர்கள் உங்களுக்கு எப்படி உதவ முடியும் என்பதைப் புரிந்து கொள்ள விரும்பினால், மேலும் தகவலுக்கு அந்தந்த நாட்டின் பெயரைக் கிளிக் செய்யவும்:
அமெரிக்காவில் குடும்ப மறு ஒருங்கிணைப்பு பற்றிய மேலும் முக்கிய தகவலுக்கு, அகதிகள்/அசைலீ குடும்ப மறு ஒருங்கிணைப்பு தகவல் தாளைப் பார்வையிடவும்
(கனடாவின் அகதிகளுக்கான தனியார் ஸ்பான்சர்ஷிப் திட்டம் (Canada’s Private Sponsorship of Refugees (PSR) Programme)
கனேடிய குடிமக்கள் மற்றும் அவர்களது சமூகம் அகதிகளுக்கு Private Sponsorship of Refugees (PSR) திட்டத்தின் மூலம் கனடாவிற்கு இடம்பெயர்வதற்கு உதவ முடியும். கனடிய அரசாங்கம் மற்றும் UNHCR கனடாவின் வலைத்தளங்களில் கூடுதல் தகவல்கள் கிடைக்கின்றன. திட்டத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ Youtube வீடியோவையும் நீங்கள் பார்க்கலாம்: அகதிகளின் தனியார் ஸ்பான்சர்ஷிப்: உண்மைகளைப் பெறுங்கள்!
UNHCR மலேசியா “Groups of 5 (G5)” ஸ்பான்சர்ஷிப் விண்ணப்பங்களுக்கான அகதி நிலைக்கான ஆதாரத்திற்கான கோரிக்கைகளைப் பெற்று வருகிறது, இதில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட கனேடிய குடிமக்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்கள் ஒரு அகதி கனடா செல்ல ஸ்பான்சர் செய்கின்றனர். UNHCR மலேசியா அத்தகைய ஆதாரத்தையோ அல்லது கடிதங்களையோ வழங்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். மாறாக, கனேடிய அரசாங்கம் UNHCR உடன் நேரடியாக G5 விண்ணப்பங்கள் உள்ள நபர்களின் அகதி நிலையை சரிபார்க்கிறது. G5 விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யும் போது, உங்கள் UNHCR ஆவணத்தின் நகலைச் சேர்க்கவும்.
அமெரிக்காவின் தனியார் ஸ்பான்சர்ஷிப் திட்டம் – வெல்கம் கார்ப்ஸ் (Welcome corps)
குறைந்தபட்சம் ஐந்து அமெரிக்க குடிமக்கள் அல்லது நிரந்தர குடியுரிமை பெற்ற பெரியவர்கள் கொண்ட குழுக்கள், அமெரிக்காவில் அகதிகளை மீள்குடியேற்றுவதற்கு தனிப்பட்ட முறையில் ஸ்பான்சர் செய்ய Welcome Corpsக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட அகதிகளை அடையாளம் கண்டு பரிந்துரைக்க விரும்பும் ஸ்பான்சர்கள், வெல்கம் கார்ப்ஸின் அகதிகளுக்கான தகுதிக் கருவியைப் பயன்படுத்தி, அவர்கள் ஸ்பான்சர் செய்ய விரும்பும் நபர்கள், அமெரிக்க அகதிகள் சேர்க்கை திட்டத்திற்கு (USRAP) பரிந்துரை செய்யத் தகுதியுடையவர்களா என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இல்லையெனில் அவர்களுக்கு ஏற்கனவே USRAP வழக்கு இருந்தால் ஸ்பான்சர் செய்யப்படலாம்.
USRAPக்கான அணுகல் மற்றும் Welcome Corpsஇன் ஆதரவு அகதிகளுக்கு இலவசம். அகதிகள் தனிப்பட்ட முறையில் ஸ்பான்சர் செய்யப்படுவதின் விளைவாக USRAP செயலாக்கத்தில் விரைவான அல்லது முன்னுரிமை அளிக்கப்பட மாட்டார்கள். பணம் செலுத்துவதற்கான கோரிக்கைகள் உட்பட ஏதேனும் சந்தேகத்திற்கிடமான மோசடி அல்லது நேர்மை குறித்து இடர்பாட்டை நீங்கள் அனுபவித்தால், சாட்சியாக இருந்தால் அல்லது எச்சரிக்கப்பட்டிருந்தால், தயவுசெய்து இதை fraud@welcomecorps.org க்கு புகாரளிக்கவும். மோசடியை தடுப்பது பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் தகவலுக்கு, வெல்கம் கார்ப்ஸ் இணையதளத்தைப் பார்வையிடவும் அல்லது அமெரிக்க வெளியுறவுத் துறை இணையதளத்தில் கிடைக்கும் சம்பந்தமுள்ள வீடியோக்களைப் பார்க்கவும்.
ஆஸ்திரேலியாவின் சிறப்பு மனிதாபிமான திட்டம் (Australia’s Special Humanitarian Programme (SHP)
Australia’s Special Humanitarian Programme (SHP) மூலம் ஆஸ்திரேலிய குடிமக்கள் மற்றும் அவர்களது சமூகம் அகதிகளுக்கு ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்வதற்கு உதவ முடியும். ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் இணையதளத்தில் கூடுதல் தகவல்கள் கிடைக்கின்றன.
UNHCR மலேசியா ஆஸ்திரேலிய உயர் ஆணையத்துடன் ஸ்பான்சர்ஷிப் செயல்முறை மூலம் தகுதிவாய்ந்த அகதிகளை ஆதரிப்பதற்காக வழமையான தொடர்பைப் பராமரிக்கிறது.
மூன்றாம் நாட்டு கல்வி வாய்ப்புகள்
சில நிரப்பு பாதைகள் அகதிகள் மூன்றாம் நாட்டில் தங்கள் கல்வியை முன்னேற்ற அனுமதிக்கின்றன. UNHCR வாய்ப்புகள் தளமானது, அகதிகளுக்குக் கிடைக்கும் மேம்பட்ட படிப்புகள், திறன்களை மேம்படுத்துதல் மற்றும் தொழில்முறை மேம்பாடு ஆகியவற்றிற்கான அங்கீகாரம் பெற்ற திட்டங்களின் பட்டியலை வழங்குகிறது. இத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு திட்டங்கலும் UNHCR ஆல் சரிபார்க்கப்பட்டது. மலேசியா அல்லது வேறு நாட்டில் உங்கள் படிப்பைத் தொடர வாய்ப்புகளை ஆராய்வதில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், இங்கே கிளிக் செய்யவும்.
மாணவர் விசா விண்ணப்பங்களை UNHCR ஆதரிக்காது என்பதை நினைவில் கொள்ளவும். மலேசியாவிற்கு வெளியே உள்ள பல்கலைக்கழகத்தால் நீங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உங்கள் மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க, புரவலன் நாட்டின் தூதரகம் அல்லது உயர் ஆணையத்தைத் தொடர்பு கொள்ளவும்.
தொழிலாளர் இயக்கம்
நிரப்பு பாதைகளில், தொழிலாளர் இயக்க திட்டங்களும் அடங்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒரு அகதி ஒரு மூன்றாம் நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து வேலை வாய்ப்பைப் பெறுகிறார், மேலும் அந்த நாட்டிற்கு பயணம் செய்வதற்கும் நுழைவதற்கும் ஆதரவைப் பெறுகிறார்.
Talent Beyond Boundaries மற்றும் TalentLift (கனடா) போன்ற சில நிறுவனங்கள் அகதிகளுக்கு ஆன்லைன் பணி அனுபவ சுயவிவரங்களை உருவாக்கவும் மூன்றாம் நாடுகளில் வேலைகளுக்கு விண்ணப்பிக்கவும் வாய்ப்புகளை வழங்குகின்றன. இந்த வேலை நிலைகள் அதிக போட்டித்தன்மை கொண்டதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
Talent Beyond Boundaries (TBB)
கிடைக்கக்கூடிய வாய்ப்புகளுக்கு, Talent Beyond Boundaries’ வாய்ப்புகள் பக்கத்தைப் பார்வையிடவும். ஒரு குறிப்பிட்ட வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, நீங்கள் Talent Catalogue-க்கு பதிவுசெய்து, பின்னர் வாய்ப்புகள் பக்கத்திற்குத் திரும்ப வேண்டும். Talent Beyond Boundaries’ ஆன்லைன் தளத்துடன் பதிவுசெய்தல் மற்றும் TBB இன் சேவைகளைப் பயன்படுத்துவது அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் முற்றிலும் இலவசம் என்பதை நினைவில் கொள்ளவும்.
TalentLift (Canada)
TalentLift (கனடா) என்பது ஒரு இலாப நோக்கற்ற சர்வதேச ஆட்சேர்ப்பு நிறுவனம், அகதிகளை வேலைக்கு அமர்த்துவதற்கு கனடிய முதலாளிகளை ஆதரிக்கிறது. கனடாவின் சர்வதேச வேலைவாய்ப்பு மற்றும் திறன் விசா தேடும் வேலை விண்ணப்பலர்களின் குழுவில் சேர, talent platformஇல் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யலாம்.
குறிப்பு: Talent Beyond Boundaries’ ஆன்லைன் தளத்தில் பதிவுசெய்தல் மற்றும் TBB இன் சேவைகள் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் இலவசம்.
தொழிலாளர் இயக்கம் வாய்ப்புகள் பற்றிய தகவல்களை நாடு சார்ந்த இணையதளங்களில் காணலாம்:
நிரப்பு பாதைகள் தொடர்பான பொருட்கள்
நிரப்பு பாதைகள் வெபினார்