தொலைநிலை நேர்காணல்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்(FAQ)

How does a remote interview work?

அதன் படிகள் இவை:

  1. தொலைநிலை நேர்காணலுக்கு உங்கள் சூழ்நிலை பொருத்தமானதா என்பதை மதிப்பிட UNHCR உங்களுக்கு அழைப்பு தொடுக்கும். இது இணையம், கை தொலைபேசி கிரெடிட் மற்றும் தனிமையான இடம் இருப்பதை பொறுத்தது. உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் கேள்விகள் உங்களிடம் கேட்கப்படும் மற்றும் தொலைநிலை நேர்காணல் செய்வதற்கு UNHCR உங்கள் ஒப்புதலைக் கேட்கும்.
  2. தொலைநிலை நேர்காணல் முறைகள் உங்களுக்கு வசதியாக இருக்கவில்லை என்றால், செயல்முறைக்கு சம்மதிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அலுவலகத்தில் உங்களின் நேர்காணலை எப்பொழுது நடத்த முடியுமோ அப்பொழுது நாங்கள் உங்களுக்காக மீண்டும் திட்டமிடுவோம்.
  3. தொலைநிலை நேர்காணலுக்கு நீங்கள் ஒப்புக்கொண்டால், உங்கள் நேர்காணலின் விவரங்களை உறுதிப்படுத்தும் வகையில் UNHCR இலிருந்து SMS ஒன்றைப் பெறுவீர்கள்.
  4. உங்கள் நேர்காணலுக்கு ஒரு நாள் முன்பு அல்லது அந்த நாளில், UNHCR இலிருந்து ஒரு முறை கடவுச்சொல்லுடன் (OTP) SMS ஒன்றைப் பெறுவீர்கள். மோசடி செய்பவர்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, இந்த கடவுச்சொல்லை யாருடனும் பகிர வேண்டாம்.
  5. நேர்காணலுக்கு முந்தைய சரிபார்ப்பு வடிவமாக OTP ஐப் பயன்படுத்துவது ஆகஸ்ட் 2021 முதல் நடைமுறையில் உள்ளது
  6. UNHCR இலிருந்து நேர்காணல் செய்பவர் அழைக்கும் போது, ​​அழைப்பவர் உண்மையான UNHCR ஊழியர் என்பதை அறிய இந்த OTPயை அவர்களிடம் கேளுங்கள். அவர்கள் உங்களுக்கு சரியான OTP ஐ வழங்கினால், நேர்காணலைத் தொடரவும். UNHCR SMS மூலம் நீங்கள் பெற்ற கடவுச்சொல்லுடன் அது பொருந்தவில்லை என்றால், நேர்காணலை நிறுத்திவிட்டு, புதிய சந்திப்பிற்காக உங்களைத் தொடர்பு கொள்ளும்போது UNHCRக்குத் தெரிவிக்கவும்.
  7. UNHCR தொலைநிலை நேர்காணல்களை நடத்த பல்வேறு வழிகளைப் பயன்படுத்துகிறது: 1) மைக்ரோசாப்ட் டீம்ஸ்(Microsoft Teams) 2) சிக்னல்(Signal), மற்றும் 3) ‘மூன்று வழி’ தொலைபேசி அழைப்புகள்

How can I know that the SMS I received is from UNHCR?

குறுந்தகவல் அனுப்பப்படுவது “62033” எனக் காட்ட வேண்டும். இது ஒரு பொது தொலைத்தொடர்பு சேவை வழங்குநராகும். இக்குறுந்தகவலில் “UNHCR” என்று குறிப்பிடப்படும். அதைத் தொடர்ந்து ஐந்து இலக்கங்களை கொண்ட ஒரு முறை கடவுச்சொல் (OTP) இருக்கும். “017-…” அல்லது “013-…” போன்ற கைத்தொலைபேசி எண்ணில் தொடங்கும் வேறு எந்த தொலைபேசி எண்ணிலிருந்தும் நீங்கள் குறுந்தகவல் ஒன்றைப் பெற்றால், அது அதிகாரப்பூர்வ UNHCR கணக்கிலிருந்து வரவில்லை என்று அர்த்தம். நேர்காணலுக்கு முந்தைய சரிபார்ப்பு வடிவமாக OTP ஐப் பயன்படுத்துவது ஆகஸ்ட் 2021 முதல் நடைமுறையில் உள்ளது.

What do I need for a remote interview?

தொலைநிலை நேர்காணல்களை நடத்துவதற்கு UNHCR வெவ்வேறு வழிகளைப் பயன்படுத்துகிறது: 1) வீடியோ கலந்துரையாடல் அழைப்புகள் (Microsoft Teams மற்றும்/அல்லது Signal ஐப் பயன்படுத்தி), மற்றும் 2) ‘மூன்று வழி’ தொலைபேசி அழைப்புகள் (உங்கள் தொலைபேசி இணைப்பைப் பயன்படுத்தி).

+ வீடியோ கலந்துரையாடல் அழைப்புகள் (Microsoft Teams மற்றும்/அல்லது Signal)

வீடியோ கலந்துரையாடல் அழைப்புகளுக்கு, Microsoft Teams மற்றும் Signal ஐப் பதிவிறக்கும்படி கேட்கப்படுவீர்கள்.

  • மைக்ரோசாப்ட் டீம்ஸ்(Microsoft Teams)

உங்கள் கணினியில் Microsoft Teams ஐ பதிவிறக்க, இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் ஸ்மார்ட்போனில்(smartphone) Microsoft Teams ஐ பதிவிறக்க, கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்:

 

IOS பயனர்களுக்கு: Microsoft Teams ஐ தேடி, நிறுவு பொத்தானைக் கிளிக் செய்யவும்.

 

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு: Microsoft Teams ஐ தேடி, நிறுவு பொத்தானைக் கிளிக் செய்யவும்.

 

நிறுவல் முடிந்ததும், நீங்கள் பதிவு செய்ய வேண்டியதில்லை.

 

  • சிக்னல்(Signal)

உங்கள் ஸ்மார்ட்போனில்(smartphone) Signal ஐ பதிவிறக்க, கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்:

 

கூகுள் பிளே ஸ்டோர்(Google Play Store) மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர்(Apple’s App Store) இரண்டிலும் Signal கிடைக்கிறது. விசைச்சொல் – சிக்னல் பிரைவேட் மெஸ்சேன்ஜ்ர்

 

பயன்பாட்டை நிறுவிய பின், உங்கள் கணக்கை உருவாக்க, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

 

உங்கள் தொடர்புகளை அணுக சிக்னல் கோரிக்கையின் போது தொடரவும் என்பதை அழுத்தவும்.

 

உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிட்டு அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும். தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு “மலேசியா” என்பதை உறுதிப்படுத்தவும்.

 

Signal இல் இருந்து குறுந்தகவல் குறியீட்டைப் பெறுவீர்கள். குறியீட்டை சரியாக உள்ளிடவும்.

 

Signal இல் உங்கள் தனி விவரத்தை அமைப்பதைத் தொடரவும்.

 

அமைவு முடிந்தது. நீங்கள் இப்போது உங்கள் Signal ஐப் பயன்படுத்தலாம்.

 

+ மூன்று வழி தொலைபேசி அழைப்பு

மாற்றாக, மொபைல் டேட்டா/வைஃபை மூலம் தொலைநிலை நேர்காணலில் கலந்து கொள்ள முடியாவிட்டால், ‘மூன்று வழி’ தொலைபேசி அழைப்பைப் பயன்படுத்தி தொலைநிலை நேர்காணலை நடத்த நீங்கள் அழைக்கப்படலாம். நேர்காணல் செய்பவர் நேரடியாக உங்கள் தொலைபேசிக்கு உங்களை அழைப்பார். இதன் மூலம் நேர்காணல் மேற்கொள்ளப்படும். சுமூகமான தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்வதற்காக மொழிபெயர்ப்பாளரும் அதே இணைப்பில் இருப்பார்.

How can I submit documentation in a remote interview?

உங்கள் ஆவணங்களை எவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நேர்காணலின் போது உங்களை நேர்காணல் செய்பவர் உங்களுக்கு அறிவுறுத்துவார்.

Is a remote interview different from being interviewed in the office?

ஒரே வித்தியாசம் என்னவென்றால், உங்களின் சொந்த பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக உங்கள் சொந்த இடத்தில் நீங்கள் நேர்காணல் செய்யப்படுவீர்கள்.

What happens if I choose not to be interviewed remotely?

UNHCR அலுவலகங்கள், உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு பாதுகாப்பான வழியில் உங்களைப் பெறத் தயாராக இருக்கும் போது நீங்கள் நேர்காணல் செய்யப்படுவீர்கள்.

What if I cannot attend the interview on the date appointed by UNHCR?

உங்கள் நேர்காணலைத் திட்டமிட UNHCR இலிருந்து அழைப்பைப் பெறும் சமயத்தில், நேர்காணலுக்கான வேறு தேதி அல்லது நேரத்தை நீங்கள் விரும்பினால், அவ்வதிகாரிக்குத் தெரிவிக்கலாம்.

நேர்காணல் நாள் அன்று, உங்களுக்கான சந்திப்பு நாளில் நேர்காணல் அழைப்பை ஏற்று, நீங்கள் பெற்ற OTP ஐப் பயன்படுத்தி உங்கள் அழைப்பு UNHCR இலிருந்து வந்ததா என்பதைச் சரிபார்க்கவும் (மேலே பார்க்கவும்). அழைப்பாளர் UNHCR என்பதை உறுதிப்படுத்தியவுடன், உங்களின் சந்திப்பை மீண்டும் திட்டமிடுமாறு உங்கள் நேர்காணலாளரிடம் கேளுங்கள்.

What if I missed the call for my remote interview?

உங்கள் நேர்காணலின் நேர இடைவெளியில் நாங்கள் எப்போதும் பலமுறை உங்களை அழைக்க முயற்சிப்போம். எங்கள் அழைப்புகளை நீங்கள் தவறவிட்டால், ஒரு மெசஜை(message) அனுப்பவும் அல்லது எங்களை மீண்டும் அழைக்கவும். உங்களின் நியமனத்தை உங்களுக்கு ஏற்ற நேரத்திற்கு மாற்றியமைக்க எங்கள் குழு உங்களை பின்னர் அழைக்கும்.