UNHCR இல் பதிவு மற்றும் மீள்குடியேற்றப் பிரிவில் பணிபுரிவதாகக் கூறும் பெண் ஒருவரைப் பற்றிய புகார்களை UNHCR பெற்றுள்ளது. அகதிகளை வாட்ஸ் அப்(WhatsApp) மூலம் தொடர்பு கொண்டு, UNHCR ஆவணங்கள், நியமனங்கள் மற்றும் பதிவு மற்றும் மீள்குடியேற்றத்திற்கான நேர்காணல்களுக்கு ஈடாக RM300-500 வரை வங்கிக் கணக்கிற்கு மாற்றுமாறு அப்பெண் கேட்டுள்ளார். தன்னைப் பற்றி புகார் அளித்தால், அவர்களின் UNHCR ஆவணங்கள் ரத்து செய்யப்படும் மற்றும் அவர்களின் வழக்குகள் மூடப்படும்என்று அந்த பெண் தனிநபர்களுக்குத் தெரிவித்தார். மேலும், அவர் UNHCR இல் பணிபுரிவதால் தனக்கு எதுவும் நடக்காது என்று கூறுகிறார்.
இது ஒரு மோசடி. இந்த நபர் UNHCR இல் வேலை செய்யவில்லை. UNHCR இன் அனைத்து சேவைகளும் இலவசம். பதிவு, அகதி நிலை நிர்ணயம் (RSD), மீள்குடியேற்றம் அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் UNHCR ஊழியர்கள் அல்லது எந்தவொரு தனிநபருக்கும் உங்கள் வழக்கைச் செயல்படுத்த நீங்கள் பணம் செலுத்த முடியாது.
UNHCR உடன் சிறப்புத் தொடர்புகள் இருப்பதாகவும், பணத்திற்கு ஈடாக நேர்காணல் அல்லது மீள்குடியேற்றத்தைப் பெற அவர்கள் உங்களுக்கு உதவ முடியும் என கூறும் நபர்களிடம் கவனமாக இருங்கள். உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
ஒரு வங்கிக் கணக்கு எண்ணுக்கு பணத்தை மாற்றும்படி UNHCR உங்களை ஒருபோதும் கேட்காது. அகதிகளிடம் இருந்து பணம் எடுப்பதில் ஈடுபட்டுள்ள எந்த UNHCR ஊழியர்களும் உடனடியாக அவர்களின் வேலை நிறுத்தப்பட்டு போலீசில் புகார் செய்யப்படுவார்கள்.
சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளை UNHCR க்கு புகாரளிப்பதால் உங்கள் UNHCR அட்டை ரத்து செய்யப்படாது, மற்றும் உங்கள் வழக்கு தாமதமாகவோ அல்லது மூடப்படவோ மாட்டாது.
பணத்திற்கு ஈடாக UNHCR சேவைகளை (பதிவு, RSD, மீள்குடியேற்றம் போன்றவற்றிற்கான நேர்காணல்கள்) வழங்க முடியும் எனக் கூறும் நபர்கள் உங்களைத் தொடர்பு கொண்டால், உடனடியாக தொலைபேசி அழைப்பை துண்டித்து, இதை இங்கு புகாரளிக்கவும்:
- காவல்துறைக்கு
- இந்தப் படிவத்தைப் பயன்படுத்தி UNHCRக்கு
UNHCR இன் செயல்முறைகள் மற்றும் உதவி பற்றிய கூடுதல் தகவலுக்கு, அகதி மலேசியா இணையதளத்தைப் பார்க்கவும்.