மீள்குடியேற்றம்
மீள்குடியேற்றம் என்பது அகதிகளை தேர்ந்தெடுத்து, அவர்கள் பாதுகாப்பு கோரிய நாட்டிலிருந்து அவர்களை அனுமதிக்க ஒப்புக்கொண்ட மற்றொரு நாட்டிற்கு மாற்றுவது. இது இறுதியில் மீள்குடியேற்ற நாட்டின் குடிமகனாக மாறுவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த மீள்குடியேற்றம் , இந்த தீர்வு தேவைப்படும் உலக அகதிகளில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே கிடைக்கிறது. உலகெங்கிலும் உள்ள அகதிகளில் 1% க்கும் குறைவானவர்களே மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். மீள்குடியேற்றம் தேவைப்படும் அகதிகளின் எண்ணிக்கைக்கு மிகக் குறைவான மீள்குடியேற்ற இடங்களே உள்ளன. அவசியம் கவனிக்க வேண்டியது:
- மீள்குடியேற்றம் ஒரு உரிமை அல்ல. UNHCR ஆல் பதிவு செய்தல் அல்லது அகதி அந்தஸ்து வழங்குதல் என்பது ஒரு தனிநபர் மீள்குடியேற்றத்திற்கு பரிந்துரைக்கப்படுவதை அர்த்தப்படுத்துவதில்லை.
- மிகவும் பாதிக்கப்படக்கூடிய அகதிகளுக்கு மீள்குடியேற்றம் ஒரு பாதுகாப்பு கருவியாக உள்ளது. சாத்தியமான மீள்குடியேற்ற சமர்ப்பிப்புக்கான அடையாளம் தனிப்பட்ட பாதுகாப்பு தேவைகளை அடிப்படையாகக் கொண்டது.
- மீள்குடியேற்ற பரிசீலனைக்கான ஒரு வழக்கின் சமர்ப்பிப்பு, தனிப்பட்ட பாதுகாப்புத் தேவைகளின் தீவிரம், பாதுகாப்புச் சூழல், புரவலன் நாட்டின் நிலை மற்றும் மீள்குடியேற்றத்திற்கு இடங்கள் கிடைப்பது உள்ளிட்ட பல காரணிகளை உள்ளடக்கியது.
முக்கியம்!
மீள்குடியேற்ற பரிசீலனைகள் உங்கள் கோரிக்கைகள் அல்லது விண்ணப்பங்களின் அடிப்படையில் இல்லை. எனவே, UNHCR மலேசியா மீள்குடியேற்றத்திற்கான கோரிக்கைகள் அல்லது விண்ணப்பங்களை ஏற்காது.
தயவுசெய்து அலுவலகத்திற்கு வரவோ, மின்னஞ்சல்கள் மற்றும் கடிதங்களை அனுப்பவோ அல்லது மீள்குடியேற்றம் கோரவோ அல்லது விண்ணப்பிப்பதற்காகவோ அலுவலகத்தை அழைக்க வேண்டாம்.
மீள்குடியேற்ற நேர்காணல்
மீள்குடியேற்றச் செயலாக்கத்திற்கு நீங்கள் தகுதியுடையவர் என கண்டறியப்பட்டால், நீங்கள் மீள்குடியேற்ற நேர்காணலுக்கு அழைக்கப்படுவீர்கள். கொள்கைப்படி, அனைத்து நேர்காணல்களும் UNHCR இல் நேரில் நடைபெறும். விதிவிலக்கான சூழ்நிலைகளில், ஆன்லைன் நேர்காணலுக்கான அழைப்பைப் பெறுவீர்கள். உங்கள் மீள்குடியேற்ற நேர்காணல் சந்திப்பை உங்களுக்குத் தெரிவிக்கும் அழைப்பின் போது, ஆன்லைன் மூலமாக நேர்காணலை நடத்த நீங்கள் விரும்பவில்லை என்றால், நீடித்த தீர்வுகள் பிரிவுக்குத் தெரிவிக்கலாம். உங்கள் மீள்குடியேற்றச் செயலாக்கத்திற்கான UNHCR இன் பரிசீலனையின் முடிவை இது பாதிக்காது.

மீள்குடியேற்ற நேர்காணலுக்குப் பிறகு
மீள்குடியேற்ற நேர்காணலுக்குப் பிறகு, உங்கள் நிலைமை கவனமாக மதிப்பாய்வு செய்யப்பட்டு, மீள்குடியேற்ற நாட்டிற்கு அவர்களின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
நீங்கள் மீள்குடியேற்றத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டால், நீடித்த தீர்வுகள் பிரிவு அல்லது மீள்குடியேற்ற நாடு உங்களைத் தொடர்புகொண்டு கூடுதல் தகவல்களை உங்களுக்கு வழங்கும்.
மீள்குடியேற்ற நாடுகள் தமது கொள்கைகள் மற்றும் சட்டங்களின்படி மீள்குடியேற்றத்தை வழங்குவதா இல்லையா என்பதை இறுதியில் தீர்மானிக்கின்றன.

முக்கிய அறிவிப்பு!
அமெரிக்க அகதிகள் சேர்க்கை திட்டத்தை (USRAP) நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் மீள்குடியேற்றத்தில் இருக்கும் அகதிகள் மீது இந்த புதிய உத்தரவின் தாக்கம் குறித்து அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து மேலும் வழிகாட்டுதலுக்காக UNHCR காத்திருக்கிறது. இது அகதிகளின் குடும்ப மறு ஒருங்கிணைப்பு செயல்முறைகள் மற்றும் WelcomeCorps செயல்முறைகளையும் பாதிக்கிறது. இதற்கிடையில், எதிர்பார்க்கப்படும் மீள்குடியேற்றத்தின் அடிப்படையில் (மீள்குடியேற்றத்திக்கு தயாராகுவதில் வேலை மற்றும் பள்ளியை விட்டு வெளியேறுதல், உடமைகள்/சொத்துக்களை விற்பது உட்பட) எந்த பெரிய வாழ்க்கை மாற்றங்களையும் செய்ய வேண்டாம்.
சாத்தியமான மோசடிகள் மற்றும்/அல்லது மோசடி செய்திகள் அல்லது சலுகைகள் குறித்து கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவும்
மீள்குடியேற்றம் அல்லது விரைவான செயல்முறைகளை ஒரு கட்டணத்திற்கு அல்லது பிற சலுகைகளுக்காக உறுதியளிக்கும் மோசடிகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். மீள்குடியேற்றம் செய்வதாக உறுதியளிக்கும் எவருக்கும் பணம் கொடுக்க வேண்டாம்
UNHCR உடன் உங்கள் வழக்கை விரைவாக செயல்படுத்த பணம் கேட்கும் எவரையும் நம்ப வேண்டாம். UNHCR ஊழியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் கூட்டாளர்கள் மீள்குடியேற்றம் உட்பட UNHCR செயல்முறைக்கு உங்களிடம் பணம் கேட்கக்கூடாது. மீள்குடியேற்றத்திற்காகவோ அல்லது வேறு ஏதேனும் UNHCR செயல்முறைகளுக்காகவோ உங்களிடம் யாராவது பணம் கேட்டால், தயவு செய்து உடனடியாக அந்த விஷயத்தைப் புகாரளிக்கவும்:
- போலீஸ் CCID மோசடி பதில் மையம் 03-26101559 அல்லது 03-26101599.
- இந்தப் படிவத்தைப் பயன்படுத்தி UNHCRக்கு: தொடர்பு – அகதி மலேசியா.
- USRAP இன் இடைநிறுத்தம், அமெரிக்காவிற்கு அகதிகள் மீள்குடியேற்றத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து அகதிகளுக்கும், செயலாக்கத்தின் அனைத்து நிலைகளிலும் பொருந்தும், எனவே மலேசியாவிலிருந்து விரைவாகப் புறப்படுவதற்கு அல்லது உங்கள் வழக்கை விரைவாக செயல்படுவதற்கு உங்களுக்கு உதவ முடியும் என்று கூறுபவர்களை நம்ப வேண்டாம். இது உண்மையல்ல. எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன் எப்போதும் UNHCR உடன் தகவலைச் சரிபார்க்கவும்.
- உங்களின் USRAP வழக்கு ஒரு ஸ்பான்சரால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், மலேசியாவிலிருந்து நீங்கள் விரைவாக வெளியாகவோ அல்லது உங்கள் வழக்கை விரைவாக செயல்படுத்தவோ ஸ்பான்சர்களால் உதவ முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.
- உங்களின் மீள்குடியேற்ற வழக்கின் நிலை அல்லது உங்கள் பயணத்தின் நிலை தொடர்பான செய்திகளை அமெரிக்க அரசு அல்லது UNHCR, IOM அல்லது RSC இன் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்காதவரை நம்ப வேண்டாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால், UNHCR அலுவலகத்தை இங்கே தொடர்பு கொள்ளவும்: தொடர்பு – அகதி மலேசியா.
- UNHCR ஆனது அகதிகள் மலேசியா இணையதளம் மூலம் புதுப்பிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும்.
புறப்படுவதற்கு முந்தைய ஏற்பாடுகள் மற்றும் மீள்குடியேற்ற நாட்டிற்கு பயணம்

இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) மருத்துவ பரிசோதனை மற்றும் கலாச்சார நோக்குநிலை, அத்துடன் ஆஸ்திரேலியாவைத் தவிர பிற நாடுகளுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட அகதிகளுக்கான பயண ஏற்பாடுகள் உட்பட தேவையான முன் புறப்பாடு ஏற்பாடுகளை ஏற்பாடு செய்கிறது. ஆஸ்திரேலியாவைத் தவிர வேறு ஒரு குடியேற்ற நாடால் நீங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், பயண அறிவுறுத்தல் தயாரானவுடன் IOM உங்களைத் தொடர்பு கொள்ளும். புறப்படுவதற்கு முந்தைய ஏற்பாடுகள் அல்லது பயணம் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் நீங்கள் IOM கோலாலம்பூரை iomkulinq@iom.int என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம் அல்லது +603 9235 5400 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.
நீங்கள் ஆஸ்திரேலியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், புறப்படுவதற்கு முந்தைய ஏற்பாடுகள் மற்றும் பயணம் குறித்து உங்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக +66 என்று தொடங்கும் தொலைபேசி எண்ணிலிருந்து Toll உங்களைத் தொடர்பு கொள்ளும்.
மீள்குடியேற்றம் தொடர்பான பொருட்கள்
மீள்குடியேற்றம் வெபினார்
குறிப்பு: மேலே உள்ள வெபினார் ஜூன் 2024 இல் நடத்தப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவும். 27 ஜனவரி 2025 அன்று நடைமுறைக்கு வந்த அமெரிக்க அகதிகள் சேர்க்கை திட்டம் (USRAP) இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக (மேலே உள்ள முக்கிய அறிவிப்பைப் பார்க்கவும்), வெபினார் பதிவில் 23:39க்கு குறிப்பிடப்பட்டுள்ள RSC விசாரிப்பு சேனலும் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சில கேள்விகள் உள்ளதா?
மேலும் தகவலுக்கு, மீள்குடியேற்றம்-அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை (FAQ) பார்க்கவும்.